இலங்கை ரொம்ப பாவம்பா.. தினேஷ் சண்டிமால் காயம்..ஆசிய கோப்பையில் இல்லை
இலங்கை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டி தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை அணியின் முன்னணி வீரர் தினேஷ் சண்டிமால் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் இலங்கையில் நடைபெற்ற 20ஓவர் போட்டிகளின் போது கை விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஒரே ஒரு 20ஓவர் போட்டியில் கடைசியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
சண்டிமாலுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இலங்கை அணியில் சண்டிமால் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை செப்டெம்பர் 15ஆம் தேதி சந்திக்கிறது.
Story first published: Tuesday, September 11, 2018, 11:27 [IST]
Other articles published on Sep 11, 2018


Click it and Unblock the Notifications