For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரு வந்து இருக்காருன்னு பாருங்க.. திடீரென மீம் கிரியேட்டராக மாறிய தினேஷ் கார்த்திக்.. வைரல் போட்டோ!

சென்னை: இந்திய அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் இணையத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியாசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற உள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா கடந்த 20ம் தேதி நடந்தது.

வாஷிங்க்டன் டிசியில் இருக்கும் கேப்பிட்டல் கட்டிடம் அருகே இந்த பதவி ஏற்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு டிரம்ப் தவிர்த்து மற்ற முன்னாள் அதிபர்கள், ஜனநாயக கட்சியினர், செனட்டர்கள் வந்து இருந்தனர்.

 எப்படி

எப்படி

இந்த பதவி ஏற்பு விழாவிற்கு ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் வந்து இருந்தார். அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட விரும்பி கடைசியில் பிரைமரி தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அதிபர் தேர்தலில் சக கட்சி உறுப்பினர் பிடனுக்கு இவர் ஆதரவு அளித்தார்.

வருகை

வருகை

இந்த நிலையில் பிடன் பதவி ஏற்பு விழாவில் இவர் அணிந்திருந்த ஸ்வட்டர் மற்றும் கையுறை பெரிய அளவில் வைரலானது. ஒரு ஓரமாக இவர் நாற்காலியில் எந்த கவலையும் இன்றி அமர்ந்து இருந்தது பெரிய அளவில் வைரலானது. இவர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வைத்து நிறைய மீம்கள் உருவாக்கப்பட்டது.

மீம்கள்

மீம்கள்

பெர்னி சாண்டர்ஸ் நிலவில் உட்கார்ந்து இருப்பது போலவும், கிரிக்கெட் மேட்ச் நடக்கும் மைதானத்தில் உட்கார்ந்து இருப்பது போலவும் மீம்கள் உருவாக்கப்பட்டது. ஒரே நாளில் பெர்னி சாண்டர்ஸ் உலகம் முழுக்க மீம் டெம்ப்லேட்டாக மாற்றப்பட்டார். உலகம் முழுக்க பல பிரபலங்களும் இவரை வைத்து மீம் வெளியிட்டனர்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கும் தற்போது பெர்னி சாண்டர்சை வைத்து மீம் வெளியிட்டுள்ளார்.அதில் உலகம் முழுக்க சுற்றிய பெர்னி சாண்டர்ஸ் தற்போது எங்கே வந்து இருக்கிறார் பாருங்கள் என்று மீம் வெளியிட்டுள்ளார். இதில் தினேஷ் கார்த்திக் அருகே பெர்னி சாண்டர்ஸ் இருப்பது போல போட்டோ ஷாப் செய்யப்பட்டுள்ளது.

 வைரல்

வைரல்

தினேஷ் கார்த்திக்கின் இந்த போஸ்ட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. பாருங்களேன் தினேஷ் கார்த்திக்கு உள்ளேயும் ஒரு மீம் கிரியேட்டர் ஒளிஞ்சு இருக்காரு என்று பலரும் இந்த மெமரி ஷேர் செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, January 28, 2021, 16:27 [IST]
Other articles published on Jan 28, 2021
English summary
Dinesh Karthik also joins in the Bernie Sanders meme trends in Twitter .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X