இந்திய அணியிலிருந்து தமிழர்கள் புறக்கணிப்பு.. எந்த பின்னணியில் எடுத்த முடிவு..கோபத்தில் ரசிகர்கள்
துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி தமிழக வீரர்களை புறக்கணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட், தீபக் ஹூடா மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா சேர்த்துள்ளார்.

நீக்கம் ஏன்?
இந்திய அணியின் ஃபினிஷர் ரோலில் கடந்த 4 மாதமாக தனது பணியை தினேஷ் கார்த்திக் சிறப்பாக செய்த வருகிறார். இதனால் ஆசிய கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுத்த ரோகித் சர்மா, ரிஷப் பண்டை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கி வைத்திருந்தார். ரோகித்தின் இந்த முடிவு கம்பீர் போன்ற வட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிடிக்கவில்லை.

தொடர் வலியுறுத்தல்
ரோகித் சர்மா தவறான முடிவு எடுப்பதாக கூறி தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதே போன்று ஆகாஷ் சோப்ரா, சபா கரிம் உள்ளிட்டவர்களும் தினேஷ் கார்த்திக்கை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், தற்போது செய்வது அறியாமல் ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக்கை காரணமே இல்லாமல் அணியை விட்டு நீக்கினார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
ஜடேஜா இல்லாத நிலையில், இந்திய அணியில் தற்போது தினேஷ் கார்த்திக் மட்டும் தான் பினிஷராக இருந்தார். தற்போது இருவரும் இல்லாத நிலையில், ரிஷப் பண்டை அணியில் சேர்த்து இருப்பது ரோகித் சர்மா எந்த யோசனையில் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஸ்வினும் இல்லை
இதனிடையே, அணியில் இருந்த ஒரே இடது கை வீரரான ஜடேஜா அணியிலிருந்து சென்றதால் தான், ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது நம்பும் படி இல்லை. இதே போன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை சேர்க்காமல், ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்கி இருப்பதும், தமிழக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications