Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக்.. இங்கி, தொடரில் ட்விஸ்ட்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பெர்மிங்கம்: இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Recommended Video

Dinesh Karthik Indian Team-க்கு கேப்டனாக அறிவிப்பு... BCCI போடும் கணக்கு *Cricket

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5வது டெஸ்ட் போட்டியில் மோதி வருகிறது.

பெர்மிங்கம் நகரத்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரத்தில் இன்று முதல் இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டி20 கிரிக்கெட் தொடர்

டி20 கிரிக்கெட் தொடர்

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 -1 என முன்னிலை வகித்து வருகிறது. இன்று தொடங்கிய கடைசி போட்டி தான் தொடரின் வெற்றியாளர் யார் என்பதை இறுதி செய்யும். இந்த போட்டி முடிந்த பிறகு ஜூலை 7ம் தேதியன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இந்த தொடரின் முதல் டி20 போட்டிக்கு அயர்லாந்து தொடரில் விளையாடிய அதே இந்திய அணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளுக்கு இந்தியாவின் முன்னணி வீரர்கள் அணிக்குள் இணைந்துவிடுவார்கள். வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்துடனான டி20 கிரிக்கெட் தொடருக்கு கிடையாது. டி20 தொடருக்காக இந்திய அணியை தயார் படுத்த, இந்தியா மற்றும் கவுண்டி அணிக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட பயிற்சி தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல் டி20 பயிற்சி போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது. அயர்லாந்து தொடரில் விளையாடிய வீரர்கள் இங்கிலாந்து வந்தடைந்துவிட்டனர். இந்த அணியை வழிநடத்தும் கேப்டனாக தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். 2வது பயிற்சி போட்டிக்கும் இவரே தான் கேப்டனாக செயல்படவிருக்கிறார்.

உள்நோக்கம் என்ன

உள்நோக்கம் என்ன

நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக்கை, டி20 உலகக்கோப்பையில் விளையாட அவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் அவரை விக்கெட் கீப்பராக செயல்படவைக்கவும் திட்டம் போடப்பட்டு வருகின்றன. தினேஷ் கார்த்திக் போன்று அனுபவ வீரர்கள் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்தால் ஃபீல்ட் செட்டிங்கிற்கு உதவியாக இருக்கும். எனவே அவரின் வியூகங்களை பார்ப்பதற்காக பிசிசிஐ கேப்டனாக நியமித்துள்ளது.

Story first published: Friday, July 1, 2022, 18:04 [IST]
Other articles published on Jul 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+