தினேஷ் கார்த்திக் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. மார்ச் 18.. என்ன நடந்துச்சு தெரியுமா?
சென்னை : தினேஷ் கார்த்திக் சுமார் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறார். தன் இளமைக் காலத்தில் எல்லாம் பெறாத ரசிகர்களின் வரவேற்பை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி பெற்றார்.
இலங்கையில் நடந்த நிதாஸ் ட்ராபி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கடந்த ஆண்டு மார்ச் 18 அன்று இந்தியா - வங்கதேசம் மோதின. இந்த போட்டி தான் தினேஷ் கார்த்திக்கை இந்தியாவின் ஹீரோவாக மாற்றியது.

இந்தியா தடுமாற்றம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இறுதிப் போட்டியில் பேட்டிங் செய்தது. 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது.

19வது ஓவர்
கடைசி இரு ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த நிலையில் மனிஷ் பாண்டே வெளியேற, தினேஷ் கார்த்திக் அந்த ஓவரை சந்தித்தார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் குவித்தார் தினேஷ்.

கடைசி ஓவர்
இதனால், கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. கடைசி ஓவரை பேட்டிங் செய்ய மிக மோசமாக திணறி வந்த விஜய் ஷங்கர் சந்தித்தார். அவர் தட்டுத் தடுமாறி பேட்டிங் செய்ய முதல் மூன்று பந்துகளில் 3 ரன்களும், நான்காவது பந்தில் ஒரு ஃபோரும் கிடைத்தது.

அந்த “சிக்ஸ்”
ஐந்தாவது பந்தில் விஜய் ஷங்கர் வெளியேற, தினேஷ் கார்த்திக் கடைசி பந்தை சந்தித்தார். 5 ரன்கள் எடுத்தால் இந்தியாவுக்கு வெற்றி. அதற்கு ஒரே வழி சிக்ஸ் அடிக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார்.

அடுத்த பினிஷர்
அந்த கணம் முதல் இந்தியாவில் தோனிக்கு அடுத்து ஒரு பினிஷர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள். அவர் சிறப்பாக பங்களிப்பு செய்த போதிலும் ஒருநாள் அணியில் அவர் கோலி -ரவி சாஸ்திரியின் "உள்ளே, வெளியே" ஆட்டத்தில் சிக்கி தவித்து வருகிறார். உலகக்கோப்பை அணியில் அவர் இடம் பெறுவது சந்தேகத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications