தினேஷ் கார்த்திக் வெறித்தனம்.. கௌரவ இலக்கை எட்டிய இந்தியா.. ரசிகர்களை ஏமாற்றிய ரிஷப், ஹர்திக்
கட்டாக்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
Recommended Video
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக சிஎஸ்கே அணியின் ருத்துராஜ் கெய்க்வாட்டும், மும்பை அணியின் இஷான் கிஷனும் களமிறங்கினர்.

இந்தியா தடுமாற்றம்
ருத்துராஜ் கெய்வாட் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 1 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசிய 21 பந்துகளில் 34ரன்கள் எடுத்தார்.

ஏமாற்றிய ரிஷப் பண்ட்
ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஆனால், 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் 40 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்படட ரிஷப் பண்ட் 5 ரன்களிலும்,ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தினேஷ் கார்த்திக் அதிரடி
தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பேட்டிங் செய்ய வந்த அக்சர் பட்டேல் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே அடித்தார். ஒரு கட்டத்தில் இந்தியாவின் ஸ்கோர் தடுமாறிய நிலையில் களத்துக்கு வந்த தினேஷ் கார்த்திக், 2 சிக்சர்கள, 2 பவுண்டரிகள் விளாசினார். கார்த்திக் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

கௌரவ இலக்கு
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 148 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் நோக்கியா 2 விக்கெட்டும், ரபாடா, மகாராஜ், பெர்னல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தற்போது ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications