For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேவையா இந்த ரிவ்யூ? தினேஷ் கார்த்திக்கை கலாய்த்த வர்ணனையாளர்கள்

கொல்கத்தா:சன் ரைசர்ஸ் அணிக்கான ஆட்டத்தில் தேவையில்லாமல் ஒரு டிஆர்எஸ் முறையை கேப்டன் தினேஷ் கார்த்திக் வீணாக்கினார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இந்த போட்டிக்கான ஹைதராபாத் அணியில் அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியை வழிநடத்துகிறார்.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

ஹைதராபாத் அணியில், டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, சந்தீப் சர்மா, விஜய் சங்கர் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அதே போல் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில்,சுப்மன் கில், ஆண்ட்ரியூ ரசல், கிரிஸ் லின் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அடித்து ஆடி தொடக்கம்

அடித்து ஆடி தொடக்கம்

டாசுக்கு பிறகு.. டேவிட் வார்னரும், பெர்ஸ்டோவும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆடினர்.

பவுண்டரி அடித்த வார்னர்

பவுண்டரி அடித்த வார்னர்

பியூஷ் சாவ்லா வீசிய பந்துகளை வார்னர் பவுண்டரிகளாக அடித்தார். அவர் வீசிய 2வது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த ஓவரில் 5வது பந்தில் சாவ்லா வீசிய பந்து, வார்னரின் காலில் பட்டது.

தினேஷ் கார்த்திக் ஆலோசனை

தினேஷ் கார்த்திக் ஆலோசனை

உடனே எல்பிடபிள்யூ அப்பீல் கோர,நடுவர் அதை நிராகரித்தார். அடுத்த சில விநாடிகளில் சாவ்லா, தினேஷ் கார்த்திக் ஆலோசனை செய்கின்றனர்.

டிஆர்எஸ் வீண்

டிஆர்எஸ் வீண்

உடனே தினேஷ் கார்த்திக் டிஆர்எஸ் கோருகிறார். சாவ்லாவின் பந்து, எவ்வாறு வார்னரின் பேடில் படுகிறது என்று பலமுறை ஆய்வு செய்யப்பட்டது.

எதற்காக ரிவ்யூ?

எதற்காக ரிவ்யூ?

அதை பெரிய ஸ்க்ரீனில் பார்க்கும் போதே தெரிகிறது. பந்து ஸ்டெம்ப்பை விட்டு வெளியே செல்கிறது. ஏன்.. எதற்காக இந்த ரிவ்யூவை தினேஷ் கார்த்திக் கேட்டார் என்றே தெரியவில்லை.

ரசிகர்கள் புலம்பல்

ரசிகர்கள் புலம்பல்

அடுத்த விநாடிகளில் வார்னர் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தேவையில்லாமல் டிஆர்எஸ்சை தினேஷ் கார்த்திக் வேஸ்ட் பண்ணிவிட்டார் என்று ரசிகர்கள் புலம்பி தள்ள ஆரம்பித்தனர்.

கலாய்த்து தள்ளினர்

கலாய்த்து தள்ளினர்

போட்டி வர்ணனையாளர்களும், எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று தினேஷ் கார்த்திக்கை கலாய்த்து தள்ளினர். ஆக மொத்தத்தில் அந்த ரிவ்யூ வீணாகி போனது தான் என்று சொல்ல வேண்டும்.

Story first published: Sunday, March 24, 2019, 17:06 [IST]
Other articles published on Mar 24, 2019
English summary
Dinesh karthik wasted a drs review against sun risers hydrabad match in kolkata.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+