Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியன் பிளேயிங் லெவன்.. தினேஷ் கார்த்திக்கின் ஷாக் முடிவு.. இப்படி தான் நடக்குமோ?

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாரை தேர்வு செய்யப் போகிறது என்பதுதான் பெரும் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

பலரும் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை அணியில் வைக்கிறார்களே தவிர களத்திற்கு எது சரி என்பதை யாரும் பார்ப்பதாக தெரிவதில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தமிழக வீர தினேஷ் கார்த்திக் தமது பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறார்.

டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

அதில் தொடக்க வீரராக கே எல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோரை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்து இருக்கிறார். இதைப் போன்று நடுவரிசையில் புஜாரா, விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்துள்ள தினேஷ் கார்த்திக் ஸ்ரேயாஸ் ஐயர், பதில் சூரியகுமார் யாதவை தினேஷ் கார்த்திக் விளையாட வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இதேபோன்று விக்கெட் கீப்பராக கே எஸ் பரத்தை குறிப்பிட்டுள்ள கார்த்திக் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களாக ஜடேஜா அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரை தேர்வு செய்து இருக்கிறார். இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாக முகமதுசமியும், முகமது சிராஜும் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ஏன் வேண்டாம்

ஏன் வேண்டாம்

கிட்டத்தட்ட இப்படி ஒரு அணி நாளை களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் தவிர தன்னுடைய திறமையை ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் நிரூபிக்கவில்லை. இதனால் நடு வரிசையில் தற்போது சிறந்த பார்மில் இருக்கும் சுப்மன் கில் தான் விளையாட வைக்க வேண்டும்.

அடுத்த கோலி

அடுத்த கோலி

ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளையாடுகிறார் என்பதற்காக டி20 யில் சுப்மன் கில்லுக்கு இந்திய நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் விராட் கோலி போன்று ஒரு வீரரை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் சுப்மன் கில்லுக்கு தான் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

Story first published: Wednesday, February 8, 2023, 23:53 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+