ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு யார் விளையாடுவார் என்று கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி சார்பாக அதிக ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றிருந்தார்.
எனினும் நடப்பாண்டில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், நியூசிலாந்து தொடரில் காயம் காரணமாக விலகினார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்ரேயாஸ் பயிற்சி செய்து வருகிறார்.
தாம் விரைவில் மீண்டும் இந்திய அணிக்கு வந்து விடுவேன். காயம் சிறப்பாக குணமடைந்து வருகிறது என்று பதிவு எல்லாம் போட்டு இருந்தார். மேலும் அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்
இதனை வீடியோவாக பதிவிட்ட ஸ்ரேயாஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் காயம் குணமடையாததால் தற்போது ஸ்ரேயாஸ் அதிகாரப்பூர்வமாக விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டு விட்டது.இதனால் மாற்று வீரராக சப்ராஸ் கான் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

தினேஷ் கார்த்திக் கருத்து
ஆனால் இதுவரை மாற்று வீரரை அறிவிக்காமல் பிசிசிஐ காலம் தாழ்த்தி வருகிறது. ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ், கில் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ஒருவருக்கு தான் நடு வரிசையில் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக தினேஷ் கார்த்திக்கிடம் யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது.

சூர்யகுமார் தான் சாய்ஸ்
இதற்கு பதில் அளித்த அவர் ஸ்ரேயாஸ் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றால் சூரியகுமார் யாதவ் , சுப்மன் கில் ஆகிய இருவருக்கு மட்டும்தான் போட்டி ஏற்படும். என்னை பொறுத்த வரையில் சூர்யகுமார் யாதவுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் சுழல் பந்துவீச்சை அதிரடியாக விளையாடுகிறார். நாம் இந்த டெஸ்ட் போட்டிகளை சில சுவாரசியமான ஆடுகளத்தில் தான் விளையாட போகிறோம். அது நிச்சயம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

சூர்யகுமாரின் பலம்
இதனால் சூர்யகுமார் யாதவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். ஏனென்றால் அவர் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். கே எல் ராகுல் தற்போது இந்திய அணிக்குள் வந்துவிட்டதால் சுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் கில்லை நடுவரசையில் களம் இறக்க வேண்டும் என கோரிக்கை பலரும் விடுத்துள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் சூர்யகுமார் யாதவ் தான் அதற்கு சரியான நபர் என்று கூறியுள்ளார்.

ரஞ்சியில் சூர்யகுமார்
இந்திய டெஸ்ட் அணியில் நடு வரிசையில் அதிரடியாக ஆடக்கூடிய பண்ட் காயம் காரணமாக தற்போது இடம்பெறவில்லை. இதனால் சூர்யகுமார் போன்ற வீரர் நடுவரிசையில் இருந்தால் அது எதிரணிக்கு நிச்சயம் கலக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சூர்யகுமார்யாதவ் ஒரு டி20 கிரிக்கெட் ஏற்படுத்திய தாக்கத்தை இதுவரை ஒருநாள் கிரிக்கெட் ஏற்படுத்தவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் அவர் சாதிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். எனினும் நடப்பு சீசனில் ரஞ்சிப் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் இரண்டு அரை சதங்கள் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications