அந்த ஆசை மட்டும் நிறைவேறாமல் போய்விட்டதே.. எஸ்.பி.பி மறைவால் கலங்கிய தினேஷ் கார்த்திக்.. உருக்கம்
சென்னை: பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு இந்தியாவையே உலுக்கி உள்ளது.இவரின் மறைவிற்கு திரை உலகினர், கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து மீண்டவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

இரங்கல்
எஸ்.பி.பி மறைவிற்கு தற்போது தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் , நேற்றும் இன்றும் அடுத்தடுத்து இரங்கல் செய்திகள் வருகிறது. நேற்று இறந்த வர்ணனையாளர் டீன் ஜோன்சை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் அவருக்கு சாக கூடிய வயது கிடையாது.

துக்க செய்தி
கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான, துள்ளலான நபர் நேற்று இறந்துவிட்டார். இன்றும் இன்னொரு துக்க செய்தி வந்துள்ளது. எனக்கு விருப்பமான, மிகவும் பிடித்த கலைஞர் இன்று இறந்துவிட்டார். பாடகர் எஸ்பிபியை நான் கலைஞர் என்றுதான் குறிப்பிடுவேன். அவர் சிறந்த கலைஞர்.

நினைவில் இருக்கும்
இந்திய சினிமா உலகில் சிறந்த, பன்முகத்தன்மை கொண்ட பாடகர் நீங்கள். இந்த உலகம் உங்களை எப்போதும் நினைவில் வைத்து இருக்கும். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. நான் உங்கள் வீட்டிற்கு வந்த போது, நீங்கள் எனக்காக, எனக்கு விருப்பமான பாடலை தனியாக பாடி காட்டினீர்கள். அந்த நாளை மறக்கவே மாட்டேன்.

ஆசை
எனக்கு அதேபோல் உங்களிடமிருந்து இன்னொரு முறை பாட்டு கேட்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் வாழ்நாள் முழுக்க எனக்கு நிறைவேறாத கனவாக இருக்க போகிறது. நீங்கள் இப்போது எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், என்று தினேஷ் கார்த்திக் மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications