
முடிவுக்கு வருகிறது
இதனால் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் சீனயர் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதில் நீங்கள் இஷான் கிஷனை எப்படி அணியில் சேர்க்காமல் இருப்பீர்கள். ஏற்கனவே சுப்மான் கில் தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தொடக்க வீரர் யார் ?
ரோகித் சர்மாவும் அணிக்கு திரும்பி விடுவார். இதனால் நீங்கள் யாரையாவது அணியில் சேர்க்காமல் விட தான் வேண்டும். அது ஷிகர் தவானாக தான் இருக்கும். அப்படி நடந்தால் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரின் முடிவாக அது அமையும். ஆனால் புதிய தேர்வு குழுவினர் தான் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். சுப்மான் கில் அணியில் இடம் பெற்றால் அவரை நீங்கள் தொடக்க வீரராக தான் களம் இருக்க வேண்டும்.

வாய்ப்பை உறுதி செய்தார்
ஏனென்றால் தொடக்க வீரராக அவர் நடப்பாண்டில் அதிக ரன்களை விளாசி இருக்கிறார். இதேபோன்று இஷான் கிஷனும் தனக்கு கிடைத்த வாய்ப்பை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டார். இதனால் ஷிகர் தவான் தன்னுடைய இடத்திற்கு போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இஷான் கிஷனை பொறுத்தவரை அவருடைய நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இரட்டை சதம் விளாசிய பிறகு கூட என்னால் 300 ரன்கள் அடித்திருக்க முடியும் ஆனால் நான் தவற விட்டு விட்டேன் என்று கூறினார்.

பசியுடன் இருக்கிறார்
இதன் மூலம் இஷான் கிஷன் ரன்களை அடிக்க வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அணியில் ஏற்கனவே பல விக்கெட் கீப்பர்கள் வாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலையில் தற்போது தன்னுடைய திறமையை இஷான் கிஷன் நிரூபித்திருக்கிறார். தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது கதவை உடைத்துக் கொண்டு நான் தயாராகி விட்டேன்.. இனியுமா என்னை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க போகிறீர்கள் என்று இஷான் கிஷன் கேட்கிறார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











