Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து

அகமதாபாத் : டி20 கிரிக்கெட் பொறுத்தவரை இனி விராட் கோலி நம்பர் 3 இடத்திற்கு வேண்டாம் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தான் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை.

ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்காமல் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களுக்கே அதிக வாய்பபு வழங்கப்படும் என தெரிகிறது.

ராகுல் திரிபாதி

ராகுல் திரிபாதி

ரோகித் சர்மா, கேஎல் ராகுலுக்கு பதில் தொடக்க வீரராக சுப்மன் கில், இஷான் கிஷன் என பெரிய பட்டாளமே காத்து கொண்டுள்ளது. இதே போன்று விராட் கோலி போன்ற ஜாம்பவான் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில், விராட் கோலிக்கு பதில் நம்பர் 3 இடத்தில் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு கொடுங்கள் என பேசியுள்ளார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதனை தொடர்ந்து பேசிய அவர், கோலியின் இடத்திற்கு ராகுல் திரிபாதி சரியான வீரராக தெரிகிறார் . விராட் கோலி இனி டி20 போட்டிகளில் இல்லை எனும் பட்சத்தில், நம்பர் 3 இடத்திற்கு ராகுல் திரிபாதியை களம் இறக்கலாம. பல்வேறு டி20 தொடர்களில் அதிரடியாக விளையாடுகிறார். மேலும் விக்கெட் வீழ்ந்தாலும் எதிரணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். சமீபத்தில் கூட நியூசிலாந்துக்கு தொடரில் 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். இலங்கை தொடரிலும் நன்றாக விளையாடினார்.

சுயநலம் இல்லை

சுயநலம் இல்லை

சுயநலம் இன்றி அணிக்காக விளையாடி வருகிறார். ஐசிசி தொடர்களில் இது போன்ற அணுகுமுறை உள்ள வீரர்கள் தான் அணியில் இடம்பெற வேண்டும் சந்தேகத்திற்கு இடமின்றி இவரை தேர்வு செய்யலாம். ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவரையும் நன்றாக எதிர்கொள்கிறார். நிறைய வாய்ப்புகள் கொடுத்தால் தன்னுடைய திறமையையும், அனுபவத்தையும் பெறுவார்.

வாய்ப்பு கொடுங்கள்

வாய்ப்பு கொடுங்கள்

எனினும் அனைத்து போட்டியிலும் விளையாட வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்க கூடாது. தொடர்ந்து விளையாடு என்று அவருக்கு நம்பக்கையை கொடுத்தால் நிச்சயம் சூர்யகுமார் போல் இவரும் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழவார். மேலும் தோனி போன்ற ஜாம்பவான்களின் அனுபவத்தை பெற்றவர் என்பதை மறந்துவிட கூடாது என்று தினேஷ் கார்த்தி கூறியுள்ளார்.

Story first published: Friday, February 3, 2023, 20:51 [IST]
Other articles published on Feb 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+