Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பு பண்றீங்களே தம்பி.. முதல் டெஸ்டில் கே.எல்.ராகுல் தேவையில்லாத திட்டம்..தினேஷ் கார்த்திக் அட்வைஸ்

சென்னை: இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் கூறிய ஒரு முக்கிய திட்டம் நடக்க வாய்ப்பே இல்லை என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியே தீர வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இதற்காக கே.எல்.ராகுல் புதிய திட்டத்தை கூறினார். அதாவது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தது சிறப்பாக இருந்தது. அதிக ரன்கள் கிடைத்தன. எனவே சட்டோகிராம் களமும் பேட்டிங்கிற்கு உதவும் என்பதால் இந்தியாவும் ஆக்ரோஷமான அணுகுமுறையை பின்பற்றப்போவதாகவும், அதுதான் வெற்றி பெற திட்டம் என்பது போலவும் கூறினார்.

தினேஷ் கார்த்திக் எதிர்ப்பு

தினேஷ் கார்த்திக் எதிர்ப்பு

இந்நிலையில் இது நடக்காது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதில், இந்தியாவால் தற்போதைக்கு ஆக்ரோஷ அணுகுமுறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆட முடியாது. ஏனென்றால் இந்தியாவின் டிஎன்ஏவிலேயே ( மரபணு ) அது இல்லை. பேட்டர்களுக்கு சாதகமான களம் என்றால் அங்கு முடிவு எட்டுவதற்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் சமன் ஆகும்.

ராகுல் கூறியதன் விளக்கம்

ராகுல் கூறியதன் விளக்கம்

கே.எல்.ராகுல் அப்படி கூறியதற்கு காரணம் உண்டு. அதாவது இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதால், அவர் சற்று அதிக ரன்களை குவித்து வெற்றி பெறுவோம் என்பதை நினைத்து கூறியிருப்பார். இந்திய அணியை பொறுத்தவரையில் முதலில் நிதானமாக விளையாடி, அதன்பின்னர் தான் மெதுவாக வேகம் எடுத்து ரன் சேர்க்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஸ்கோர் விவரம்

ஸ்கோர் விவரம்

தினேஷ் கார்த்திக் கூறியதே தான் நடந்தது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் சற்று அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் குவித்தனர். ஆனால் 41/0 என இருந்த இந்திய அணி வெகு சீக்கிரமே 48/3 எனத் திணறியது. விராட் கோலியும் ஒரு ரன்னுக்கு அவுட்டானார். இதன்பின்னர் நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், புஜாரா ஆகியோர் அணியை மீட்டனர்.

Story first published: Thursday, December 15, 2022, 12:03 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+