Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்தியாவுக்கு தினேஷ் கார்த்திக் வார்னிங்

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடந்த முறை செய்த அதே தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உறுதியானது.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் ஒருமுறை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இறுதி சுற்று

இறுதி சுற்று

இந்திய மண்ணில் இந்திய அணியை விட வேறு எந்த அணியாலும் சிறப்பாக விளையாடிவிட முடியாது. ஆனால் இறுதிப்போட்டி நடைபெறும் இங்கிலாந்து களம் இந்தியாவுக்கு அப்படியே நேர்மாறாக இருக்கக்கூடும். இங்கு விளையாட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு முன்பாக சென்று பயிற்சி பெற வேண்டும். இதே போல இந்தியாவின் பவுலிங் திட்டங்களே முற்றிலும் மாறுபடப்போகிறது.

சுழற்பந்துவீச்சு ஜோடி

சுழற்பந்துவீச்சு ஜோடி

இந்திய களங்களில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்‌ஷர் பட்டேல் என முன்று முக்கியமான ஸ்பின்னர்கள் தேவை. ஆனால் இங்கிலாந்தில் நிச்சயமாக 3வது ஸ்பின்னர் தேவைப்பட மாட்டார். 2வது ஸ்பின்னரையே கொண்டு செல்லலாமா வேண்டாமா? என்பதை இந்திய அணி நிர்வாகம் பல முறை யோசித்துப்பார்த்து தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

 தினேஷ் கார்த்திக் பதில்

தினேஷ் கார்த்திக் பதில்

இந்நிலையில் இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில், உண்மையை சொல்லப்போனால் அஸ்வின், ஜடேஜா என அனைவருமே நல்ல உடற்தகுதியுடன் இருந்தால், அப்போது கண்டிப்பாக அக்‌ஷர் பட்டேல் இடம்பெற மாட்டார். அவரின் இடத்தை ஷர்துல் தாக்கூர் எடுத்துக்கொள்வார். ஜடேஜா - அஸ்வின் ஆகியோரிலேயே யாரோ ஒருவரை தான் தேர்வு செய்வார்கள் என நினைக்கிறேன்.

அதே தவறு

அதே தவறு

கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றில் அஸ்வின் - ஜடேஜா இருவரையுமே ப்ளேயிங் 11ல் சேர்த்துக்கொண்டனர். ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற பிட்ச்-ல் அந்த ஜோடியால் பெரியளவில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இது ஒரே ஒரு நாக் அவுட் போட்டி. எனவே இதில் எந்தவித ரிஸ்க் முடிவுகளையும் எடுத்துவிட கூடாது. சிறந்த ப்ளேயிங் 11-ஐ மட்டுமே வைத்து விளையாட வேண்டும்.

Story first published: Wednesday, March 15, 2023, 19:41 [IST]
Other articles published on Mar 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+