Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இவர பார்த்து கத்துக்கனும்பா..” கோலிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக்கின் பேச்சு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

லண்டன்: விராட் கோலிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் பேசியுள்ள வார்த்தைகள் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தான் தற்போது கிரிக்கெட் உலகம் முழுவதும் பேசுப்பொருளாக இருக்கிறார்.

குறிப்பாக அவருக்கு இனி டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

விராட் கோலிக்கு ஓய்வு

விராட் கோலிக்கு ஓய்வு

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிர்க்கெட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விராட் கோலி சொதப்பினார். இதனையடுத்து அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் இருந்து ஓய்வு தரப்பட்டுள்ளது. இந்த ஓய்வுக்கு பிறகாவது அவர் கம்பேக் தருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆதரவுக் குரல்

ஆதரவுக் குரல்

இந்நிலையில் கோலிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் களத்தில் குதித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கடந்த காலங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய வீரர் விராட் கோலி. அவருக்கு ஃபுல் ஃபார்முடன் கம்பேக் கொடுப்பதற்கு இந்த ஓய்வு நிச்சயம் சிறந்த ஒன்றாக இருக்கும்.

 யாராலும் நீக்க முடியாது

யாராலும் நீக்க முடியாது

விராட் கோலி போன்ற ஒரு அட்டகாசமான வீரர் எப்போதுமே நீக்கப்பட முடியாது. அதே சமயம் ஃபார்ம் அவுட்டாகி மீண்டும் கம்பேக் தருவது என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. அதற்காக நான் மிக கடுமையாக உழைத்தேன். அதுவும் தற்போதுள்ள இந்திய அணியில் போட்டிகள் கடுமையாக உள்ளது. அதை தாண்டி தான் உள்ளே நிலைத்து நின்றாக வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கம்பேக்

தினேஷ் கார்த்திக் கம்பேக்

இந்திய அணியில் சமீபத்தில் அட்டகாசமான கம்பேக் தந்தவர் தினேஷ் கார்த்திக். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவர், வர்ணனையாளராக மாறியிருந்தார். பின்னர் ஐபிஎல் தொடரில் காட்டிய அதிரடிகள் மூலம் மீண்டும் அணிக்குள் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Tuesday, July 19, 2022, 16:02 [IST]
Other articles published on Jul 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+