
முக்கிய தருணம்
இதனிடையே, இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் குல்தீப் யாதவை வெகுவாக பாராட்டியுள்ளார். அதில், ஷாகிப் அல் ஹசன் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர். ஒரே சுழற்பந்துவீச்சை எப்படி சமாளித்து ரன் சேர்ப்பது என அவருக்கு நன்கு தெரியும். ஆனால் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி, ஷகிபுல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தினார் . இது தான் ஆட்டத்தின் பெரிய முக்கிய தருணமாக நான் கருதுகிறேன்.

முக்கிய வீரர்
அந்த பந்து குல்தீப்பிற்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கும்.இதன் மூலம் குல்தீப் தனது பந்துவீச்சு மூலம் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டனர். .இனி வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் குல்தீப் யாதவ் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக திகழ்வார். அவரை ஆயுதம் போல் இந்திய அணி பயன்படுத்தலாம்.

பேட்டிங்கிலும் அசத்தல்
குல்தீப் பந்துவீச்சில் மட்டுல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக விளங்குகறார். இந்தியா பேட்டிங்கில் தடுமாறிய போது அஸ்வினுடன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 200 பந்துகளில் 87 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இது இந்தியா 400 ரன்களுக்கு மேல் அடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது குறித்து பேசிய கார்த்திக், குல்தீப் யாதவ் தொடக்கத்தில் உத்தரபிரதேச அணிக்காக டாப் ஆர்டரில் பேட்ஸ்மேனாக விளையாடினார். பெரிய ஷாட் ஆடும் அளவிற்கு அவரிடம் பவர் இல்லை. இதனால் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் குல்தீப் யாதவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

பெரிய வித்தியாசம்
ஆனால் டெஸ்ட் போட்டியில், அவர் நேர்த்தியாக ஷாட் ஆடி ரன்களை சேர்க்கிறார். அவர் ஒரு சுழற்பந்து வீச்சாளராக இருப்பதால், சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கெதள்ள வேண்டும் என்று ஒரு பேட்ஸ்மேனாக அறிந்து கொண்டு வைத்திருப்பார். இதன் காரணமாக குல்தீப் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ரன் சேர்க்கிறார்.290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவதற்கும் 404 ரன்களை எட்டுவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அது குல்தீப் யாதவால் தான் நிகழ்ந்தது.


Click it and Unblock the Notifications











