Andre Russell: அவரை நம்பினோம்… எங்களை கைவிடவில்லை… உருகி, உருகி பாராட்டும் தினேஷ் கார்த்திக்
பெங்களூரு: ரசலை நம்பினோம்... அவரும் எங்களை கைவிடவில்லை என்று கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறி இருக்கிறார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா, பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை எவ்வளவு காலம் ஆனாலும் பேசிக்கொண்டே இருக்கலாம். இனி... கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்தான போட்டிகள் என்ற பட்டியலில் இந்த போட்டியும் நிச்சயம் இடம்பெறும்.
அந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 206 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆட்டத்தை தொடங்கியது கொல்கத்தா.

தொடக்க வீரர்கள்
தொடக்க வீரர்கள் லின் 43 ரன்களிலும், சுனில் நரைன் 10 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த உத்தப்பா 33 ரன்களும், ராணா 37 ரன்களும் எடுத்தனர்.

18 பந்துகள், 53 ரன்கள்
ஸ்கோர் 153 ஆக இருந்தபோது 19 ரன்களில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். இதையடுத்து வெற்றி பெற 18 பந்துகளில் 53 ரன்கள் தேவையாக இருந்தது. ஆட்டம் முழுமையாக பெங்களூரு அணி வசம் இருந்தது.

போக்கு மாறியது
அதன் பின்னர் ரணகள ரசலின் காட்டடியால் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. ரசல் 13 பந்துகளில் 48 ரன்களை குவித்து 19.1 ஓவரிலேயே அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன்படி கடைசி 13 பந்துகளில் கொல்கத்தா 53 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அற்புதமான ஆட்டம்
இது குறித்து அந்த அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:ரசலின் ஆட்டம் அற்புதம். அதை பற்றி கூற வார்த்தைகளே இல்லை. அவரை நாங்கள் நம்பினோம். அவரும் கைவிட வில்லை.

கவனம் செலுத்த வேண்டும்
ஸ்பின் பந்துகளை விட.. வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது மிக சுலபம். கிறிஸ் லின்னின் ஆட்டமும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் பந்தவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications