Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பேட் என்பது பக்கத்து வீட்டுக்காரன் மனைவி மாதிரி" - எடக்குமுடக்கு கமெண்ட்ரி.. சிக்கலில் DK

இங்கிலாந்து: வர்ணனைக்கு புகழ் பெற்ற தினேஷ் கார்த்திக், இப்போது அதே வர்ணனையால் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.

தினேஷ் கார்த்திக், சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வர்ணனையாளராக பணிபுரிந்தார். இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் அணி போட்டிக்கும், இப்போது இலங்கை தொடருக்கும் வர்ணனை செய்து வருகிறார்.

அவரது கமெண்ட்ரி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக, வெளிநாட்டு வர்ணனையாளர்களுக்கு அவர் தரும் ஒன்லைன் பன்ச், ரசிகர்களிடம் ஏகபோக வைரல் ஆனது.

 கடும் சர்ச்சை

கடும் சர்ச்சை

இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை இடையே நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்த போது அவர் கூறிய கருத்து கடும் சர்ச்சையாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்களின் பேட் குறித்து, இதுவரை யாருமே சிந்திக்காத கோணத்தில் (!) உலக லெவலில் ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டறிந்து பேசியுள்ளார்.

 சிக்கலில் தினேஷ்

சிக்கலில் தினேஷ்

அதாவது, எந்த பேட்ஸ்மெனுக்கும் தங்கள் வைத்திருக்கும் பேட்களை விட, அடுத்த வீரர் வைத்திருக்கும் பேட்களைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். பேட்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போல.. நம்மிடம் இருப்பதை விட அடுத்தவரிடம் இருப்பது தான் சிறப்பாக தெரியும். அது போன்று, தம்மிடம் உள்ள பேட்களை விட, அடுத்தவர்களிடம் உள்ள பேட்களைத் தான் பேட்ஸ்மேன்கள் விரும்புவார்கள் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போக, இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

 பெண்கள் அதிருப்தி

பெண்கள் அதிருப்தி

இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் பலரும் அதிருப்தியுடன் டிவீட் செய்துள்ளனர். அதில், ஒருவர் "உங்கள் வர்ணனை பிடிக்கும். ஆனால், அடுத்த வீட்டுக்கார்களின் மனைவியை எடுத்துக்காட்டாக கூறியதை சற்றும் எதிர்பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "தினேஷ் கார்த்திக் பக்கத்து வீட்டுக்காரரை நினைத்தால் பரிதாபமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

 கார்த்திக் மீது நடவடிக்கை?

கார்த்திக் மீது நடவடிக்கை?

கார்த்திக்கின் இந்த பேச்சு இப்போது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், பிசிசிஐ விரைவில் இதுகுறித்து விளக்கம் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை யாராவது இதுகுறித்து முறைப்படி புகார் அளித்தால், தினேஷ் கார்த்திக் வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிரிக்கெட்டில் தினேஷின் பேட்டிங்கை விட, அவரது வர்ணனைக்கு ரசிகர்கள் குவிந்த நிலையில், இப்போது அதே வர்ணனையே அவருக்கு எதிராக அமைந்துள்ளது.

Story first published: Saturday, July 3, 2021, 16:23 [IST]
Other articles published on Jul 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+