Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. டி20 உலககோப்பையிலிருந்து விலகும் தினேஷ் கார்த்திக்.. ஏமாற்றம்

பெர்த் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 6 மாதமாக பினிஷர் ரோலை சிறப்பாக செய்தவர் கார்த்திக்.

ஆனால் டி20 உலககோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முக்கிய கட்டத்தில் கார்த்திக் ஆட்டமிழந்தார்.

நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் தினேஷ் கார்த்திக் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 6 ரன்கள் சேர்த்தார்.

ஏமாற்றிய கார்த்திக்

ஏமாற்றிய கார்த்திக்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்வரிசை வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், தினேஷ் கார்த்திக் தனது திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. சூர்யகுமாருடன் இணைந்து ஒரு 20 ரன்கள் அடித்திருந்தால் கூட இந்தியாவின் ஸ்கோர் 150 ரன்கள் ஆகி இருக்கும். அதனை வைத்து பவுலர்கள் சமாளித்து இருப்பார்கள்.

2 வாய்ப்பு வீண்

2 வாய்ப்பு வீண்

ஆனால் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து 2 முக்கிய ஆட்டத்தில் ஏமாற்றி இருப்பது அவரது ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமாக இருப்பதால் தினேஷ் கார்த்திக்கால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை. அவருக்கு ஏற்ற ஆடுகளம் என்றால் அது அடிலெய்ட் தான்.

காயம்

காயம்

இதனால் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக வரும் புதன்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பார்ம்க்கு திரும்ப ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த நிலையில் தான் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்த கார்த்திக்கிற்கு திடீரென்று காயம் ஏற்பட்டது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இதனால், அவர் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறி, அந்த இடத்திற்கு ரிஷப் பண்ட் வந்தார். இந்த நிலையில் காயம் காரணமாக தினேஷ் கார்த்திக் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் திரும்ப அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கார்த்திக் இடம்பெற மாட்டார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது.

Story first published: Monday, October 31, 2022, 10:50 [IST]
Other articles published on Oct 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+