Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டே இனி இவங்க கையில் தான்.. தினேஷ் கார்த்திக் ஆருடம்.. ராகுல் குறித்தும் கருத்து

மும்பை : இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது ஒருநாள் அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், டி20 போட்டிக்கு சூர்யகுமார் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கேஎல் ராகுலின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. துணை கேப்டன் என்பதால் பார்மில் இல்லை என்றாலும் அணியில் நீடிக்கும் ராகுலின் வித்தை இனி வேலைக்கு ஆகாது. இதனால் ரன் அடித்தால் மட்டுமே இடம் என்ற நிலை ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் கடந்த 12 மாதத்தில் இந்திய அணிக்கு 7 பேர் கேப்டன்களாக இருந்தனர்.

 நேரடி போட்டி

நேரடி போட்டி

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து ஒரே நேரத்தில் நடைபெற்றதே அதற்கு காரணம். ஷிகர் தவான், ரிஷப் பண்ட், கே எல் ராகுல் ,பும்ரா கேப்டனாக சில காலம் இருந்தார்கள். ஆனால் தற்போது ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டும்தான் கேப்டன் பொறுப்புக்கு நேரடி போட்டியில் இருக்கிறார்கள்.

எதிர்கால கேப்டன்

எதிர்கால கேப்டன்

கே எல் ராகுல் கேப்டனாக இருந்து டெஸ்ட் போட்டியில் வென்றாலும், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கிலும் அவருடைய ஃபார்ம் பாதிக்கப்பட்டது . ஆனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஐபிஎல் போன்ற தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று தந்திருக்கிறார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு தான் எதிர்காலத்தில் கேப்டன் ஆக வாய்ப்பு இருக்கிறது.

பெரும் சவால்

பெரும் சவால்

இப்போது உள்ள சூழ்நிலையில் ராகுல் கேப்டன் பந்தயத்தில் போட்டி போட வாய்ப்பில்லை.

அடுத்த 12 மாதத்தில் ரோகித் ,ஹர்திக் பாண்டியா கூட்டணி தான் இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் தற்போது இவர்கள்தான் மிகப்பெரிய வீரர்களாக இருக்கிறார்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறினார். ரோகித் சர்மாவை பொருத்தவரை 2023 ஆம் ஆண்டு உலககோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெரும் சவாலாக இருக்கும்.

இளம் வீரருக்கும் வாய்ப்பு

இளம் வீரருக்கும் வாய்ப்பு

அதில் ஒரு வேளை ரோகித் சர்மா சொதப்பி விட்டால், வெள்ளை நிற பந்துக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஹர்திக் ஆல் ரவுண்டர் என்பதால் காயம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் சுப்மான் கில் போன்ற இளம் வீரர்களையும் கேப்டன் பொறுப்புக்கு தயார்படுத்துவது அவசியம்.

Story first published: Thursday, December 29, 2022, 12:51 [IST]
Other articles published on Dec 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+