For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாவ்!! டி20யில் கோலிக்கு இணையாக சாதித்து வரும் தினேஷ் கார்த்திக்.. செம ரெக்கார்ட்!!!

Recommended Video

டி20யில் கோலிக்கு இணையாக சாதித்து வரும் தினேஷ் கார்த்திக்

சிட்னி : டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு இணையான ஒரு சாதனையை செய்து வருகிறார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணியில் விராட் கோலி அணியின் வெற்றியில் பெரிய பங்கு ஆற்றுகிறார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கோலியை போல, போட்டிக்கு போட்டி தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அப்படி டி20 போட்டிகளில் சேஸிங்கில் கோலிக்கு இணையாக அணிக்கு வெற்றி பெற்று கொடுத்து வருகிறார் தினேஷ் கார்த்திக்.

ஆச்சரியம் அளிக்கும் புள்ளி விவரம்

ஆச்சரியம் அளிக்கும் புள்ளி விவரம்

இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் இருவரும் கடைசி வரை நின்று அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இது போல, இந்திய அணியின் வெற்றிகரமான சேஸிங்களில் எத்தனை முறை கோலியும், தினேஷ் கார்த்திக்கும் பங்களிப்பு செய்துள்ளார்கள் என பார்த்தால், அது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது.

வெற்றி பெற்ற சேஸிங்கில் சராசரி 120

விராட் கோலி இந்தியாவின் வெற்றிகரமான 20 டி20 சேஸ்களில் ஆடி 10 அரைசதம் அடித்துள்ளார். மேலும், இந்த 20 இன்னிங்க்ஸ்களில் அவர் அடித்த குறைந்த ரன் 21 தான். இதனுடைய சராசரி 120.60 என்பதும் குறிப்பிடத்தக்கது.

12 முறை வெற்றி தேடித் தந்த கோலி

12 முறை வெற்றி தேடித் தந்த கோலி

அது போல கோலி, 12 முறை ரன் சேஸிங்களில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் கோலி. அந்த 12 முறையும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கோலி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தால் இந்தியா வெற்றி பெற்று விடும் என்ற நிலை உள்ளது. தினேஷ் கார்த்திக்கும் இந்த பட்டியலில் தற்போது சேர்ந்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் சூப்பர் சேஸிங்

தினேஷ் கார்த்திக் கடைசி 12 டி20 போட்டிகளில் 9 முறை ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றுள்ளார். அந்த 9 முறையும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அவர் தோல்வி அடைந்த 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

போட்டி போடும் தினேஷ்

போட்டி போடும் தினேஷ்

தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இடையே போட்டி உள்ளது. ரிஷப் பண்ட் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சொதப்பி வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளார்.

[வெறும் பில்டப் மட்டும் தான் இருக்கு.. ரிஷப் பண்ட், ராகுலுக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு?]

Story first published: Monday, November 26, 2018, 12:10 [IST]
Other articles published on Nov 26, 2018
English summary
Dinesh karthik is following the footprint of Kohli in successful T20 run chases
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+