Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் ப்ளேயிங் 11ல் இருக்க மாட்டார்.. தென்னாப்பிரிக்க தொடரில் ஏமாற்றம்.. ஏன் தெரியுமா?

மும்பை: தென்னாப்பிரிக்க டி20 தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார் எனத் தெரியவந்துள்ளது.

Recommended Video

IND vs SA தொடரில் Dinesh Karthik விளையாடுவதில் சிக்கல் | #Cricket

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.

இரு அணிகளும் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினேஷ் கார்த்திக் கம்பேக்

தினேஷ் கார்த்திக் கம்பேக்

இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ரசிகர்கள் அனைவருக்கும் பேரின்பம் கொடுத்தது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் கம்பேக் தான். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு நல்ல ஃபினிஷராக இருந்த அவர் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். எனவே டி20 உலகக்கோப்பைக்கான இவரின் பயணம் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 வாய்ப்பு கிடைக்காது

வாய்ப்பு கிடைக்காது

இந்நிலையில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிகிறது. ஏனென்றால் இந்த அணியில் ஏற்கனவே கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், இஷான் கிஷான் என 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் கே.எல்.ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாகவும் இருப்பதால் நிச்சயம் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார்கள். பண்ட் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

ஓப்பனிங்கில் ராகுலுடன் களமிறங்க இஷான் கிஷானுக்கு தான் பெரியளவில் வாய்ப்பு இருப்பதால் அவரும் இடம்பெறுவார். மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா ஆகியோர் விளையாடுவார்கள். இதேபோன்று லோயர் ஆர்டரில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் எனத் தெரிகிறது.

பவுலிங்கில் கட்டாயம்

பவுலிங்கில் கட்டாயம்

பந்துவீச்சிலும், இந்திய அணி 3ஸ்பின்னர்கள் மற்றும் 2 முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்பதால், இதில் தினேஷ் கார்த்திக்கிற்கான இடம் எங்குமே கிடைக்காது. எனவே தென்னாப்பிரிக்க தொடர் முழுவதுமாக அவர் பெஞ்சில் தான் அமரவுள்ளது தெரியவருகிறது.

Story first published: Monday, May 23, 2022, 18:25 [IST]
Other articles published on May 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+