மச்சான் நீ கெத்தா போடல.. அந்த பாம்பு நம்மளை போட்டுடும்.. ரஹீமை கிண்டல் செய்த தினேஷ் கார்த்திக்
Recommended Video

கொழும்பு: நேற்று வங்கதேசத்திற்கு எதிராக நடந்த டி-20 போட்டியில் தினேஷ் கார்த்திக், முஸ்தபீர் ரஹீமை தமிழில் பேசி கிண்டல் செய்து இருக்கிறார். இலங்கைக்கு எதிராக ரஹீம் ஆடிய பாம்பு டான்ஸை வைத்து கிண்டல் செய்துள்ளார்.
இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.
இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
தினேஷ்
இதில் தினேஷ் கார்த்திக் தமிழக வீரர்களிடம் தமிழில் மட்டுமே பேசினார். அவர் சீனியர் வீரர் என்பதால் வாஷிங்டன் சுந்தரிடமும், விஜய் சங்கரிடமும் தமிழில் பேசினார். எப்படி பந்து போட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வெளியே
இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பவுலிங் செய்யும் போது தினேஷ் கார்த்திக் அவரிடம் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ''மச்சான் சும்மா வெளிய போடு. அவன் இறங்குனா மாட்டுவான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அழகான பால்
அதேபோல் ''மச்சான் இந்த பால் அழகா இருந்துச்சு, இப்படியே போடு'' என்று தினேஷ் கார்த்திக் வாஷிங்டன் சுந்தரிடம் கூறியுள்ளார். இதை வைத்து ரோஹித் சர்மாவை கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
பாம்புடா
இலங்கைக்கு எதிரான போட்டியில் ரஹீம் ஆடிய பாம்பு டான்ஸை கிண்டல் செய்து தினேஷ் பேசியுள்ளார். அப்போது வாஷிங்டன் சுந்தரிடம் ''மச்சான் நீ கெத்தா போடல, அந்த பாம்பு (முஸ்தபீர் ரஹீம்) நம்மளை போட்டுடும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications