For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

T20 World cup: ரன் மழைப் பொழியப்போவது அவர்தான்.. அடித்துக்கூறும் தினேஷ் கார்த்திக்.. இவ்வளவு சிறப்பா

சென்னை: டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் மழை பொழியக்கூடிய வீரர் யாராக இருப்பார் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதனுடைய போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது.

இதில், வரும் அக்டோபர் 24ம் தேதி, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் அணிகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. மீதமுள்ள அணிகள் முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றும் நுழைய வேண்டும்.

இந்தியாவின் போட்டிகள்

இந்தியாவின் போட்டிகள்

குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பிறகு நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. ஒரு சில அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்த முறையை யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிக்கக்கூடிய திறன் யாருக்கு உள்ளது என தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய அணியின் ரோகித் சர்மா அல்லது ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருவரில் ஒருவர்தான், டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. இரண்டு பேரும் ஓப்பனிங் வீரர்கள் என்பதால் நிலைத்து நின்று விளையாடக் கூடியவர்கள். அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பது மட்டும்தான் இவர்களின் எண்ணத்தில் இருக்கும்.

ஹிட் மேன்

ஹிட் மேன்

ரோகித் சர்மாவை பொறுத்தவரை, உலகக்கோப்பை தொடரில் எப்படி செயல்படுவார் என்பது அனைவருக்குமே தெரியும். உலகக் கோப்பை தொடர், ரோஹித் சர்மா இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது. உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ரன்மழை பொழியக் கூடியவர். இவரால் சிறந்த தொடக்கம் கொடுக்க முடியும். மேலும் சிலர் இவருக்குப் பக்கபலமாக விளையாடினால், இந்தியா வெற்றிகளை குவிக்கும் எனத் தெரிவித்தார்.

Story first published: Tuesday, August 24, 2021, 21:36 [IST]
Other articles published on Aug 24, 2021
English summary
Indian Wicket keeper batsmen Dinesh Karthik names best batters on t20 world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+