என்ன நம்பிக்கைடா சாமி.அவர் கண்டிப்பா அணிக்கு தேவை.இளம் வீரருக்காக குரல் கொடுக்கும் தினேஷ் கார்த்திக்
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் புதிய ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இரு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது.
> இந்நிலையில் ஒரு வீரரை குறிப்பிட்டு அவர் இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார்.

அசத்தல்
2வது டி20 போட்டியில் 165 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மறுமுனையில் தன்னம்பிக்கையுடன் இருந்த அறிமுக வீரர் இஷான் கிஷான் கேப்டன் கோலிவுடன் ஜோடி சேர்ந்தார். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

புகழாரம்
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தொடக்க வீரர் இஷான் கிஷான் தனது முதல் போட்டியிலேயே அரைசதத்தை கடந்தார். இதனால் அறிமுகமாகிய முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் 61 ரன்களுடன் அஜின்கியா ரஹானே உள்ளார்.

இவர் தேவை
இதுகுறித்து பேசியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்தி, அட்டகாசமான ஷாட்கள், இஷான் கிஷான் ஆட்டத்தை தொடங்கிய விதம் மற்றும் அவரின் நம்பிக்கை, அவர் ஒரு பவர் ப்ளேயர் என்பதை காட்டியது. இதுபோன்ற வீரர்கள் டாப் ஆர்டரில் தேவை. அப்போதுதான் பவுலர்களுக்கு அழுத்தம் தர முடியும். ஆர்ச்சரின் முதல் பந்து முதலே இஷான் அதனை செய்தார். என தெரிவித்துள்ளார்.

முக்கிய வீரர்
இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் விராட் கோலி. அறிமுக வீரருடனும் சிறப்பான முறையில் அவர் அளித்த பார்ட்னர்ஷிப்பே வெற்றி பெற உதவியது என தினேஷ் கார்த்திக் கூறினார். 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 73 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் அவர் டி20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications