Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவேந்திர சாஹலுக்கு ஏன் வாய்ப்பு தரல.. அணிக்குள் நடந்த சம்பவம்.. தினேஷ் கார்த்திக் வெளிப்படை பேச்சு

வெல்லிங்டன்: டி20 உலகக்கோப்பை தொடரில் யுவேந்திர சாஹல் சேர்க்கப்படாததற்கு பின்னணியில் நடந்த சம்பவம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் மிக மோசமாக அவுட்டாகி வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்திய அணியின் இந்த தோல்விக்காக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ராகுல் டிராவிட் என பலர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதில் முக்கிய பிரச்சினை யுவேந்திர சாஹல் தான்.

சாஹல் புறகணிப்பு

சாஹல் புறகணிப்பு

உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியில் சென்ற 15 வீரர்களில் ஹர்ஷல் பட்டேல் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோர் மட்டுமே ஒரு வாய்ப்பை கூட பெறவில்லை. அரையிறுதியில் அடிலெய்டின் கால சூழலுக்கு சாஹல் தான் சரியாக இருப்பார் என அனைவரும் கூறிய போதும், அவர் புறகணிக்கப்பட்டார். இதுதான் தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் குவிகின்றன.

தினேஷ் விளக்கம்

தினேஷ் விளக்கம்

இந்நிலையில் சாஹலுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதில், தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே தெளிவாக கேப்டனும், ராகுல் டிராவிட்டும் ஒரு விஷயத்தை கூறிவிட்டனர். அதாவது சூழ்நிலைக்கு ஏற்ப தான் மீதமுள்ளவர்கள் வாய்ப்பு பெறுவார்கள். அதற்கு வாய்ப்பே இல்லாமலும் போகலாம் என கூறினர்.

 தெளிவாக பேசிவிட்டனர்

தெளிவாக பேசிவிட்டனர்

ஒருவேளை திடீரென விளையாடக்கூறினால்,என்ன சிறப்பாக செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு முதலில் இருந்தே வீரர்கள் இருந்தனர். இந்த தெளிவான விளக்கங்கள் எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. யுவேந்திர சாஹல் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.

நியூசிலாந்து போட்டி

நியூசிலாந்து போட்டி

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் யுவேந்திர சாஹல் தான் முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை அவர் நல்ல கம்பேக் கொடுத்தால், தொடர்ச்சியாக வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, November 18, 2022, 22:20 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+