Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!

மும்பை: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவிடம் உள்ள முக்கிய பலவீனத்தை காண முடிந்ததாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமன் செய்துள்ளது.

நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கு வெறும் 100 ரன்கள் மட்டும் தான். ஆனால் இதனை விரட்டுவதற்கு இந்திய அணி பட்ட சிரமம் மிகவும் மோசமாகும். ஒரு பவுண்டரியை அடிப்பதற்கு கூட படு மோசமாக திணறினர். இதற்கு காரணம் பிட்ச் மிகவும் மெதுவாகவும், ஸ்பின்னானதும் தான்.

2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

இந்திய அணியில் 70 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்த பிறகு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா - சூர்யகுமார் யாதவ் ஜோடி 31 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தனர். இதில் இந்தியாவின் வெற்றியை விட, சூர்யகுமாரின் வித்தியாசமான ஆட்டம் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக மிகவும் நிதானமாக ரன்களை அடித்துக்கொண்டிருந்தார்.

சூர்யகுமார் பேட்டிங்

சூர்யகுமார் பேட்டிங்

கடந்த 45 இன்னிங்ஸ்களாக சூர்யகுமாரின் ஸ்ட்ரைக் ரேட் 180+ ஆக இருந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பந்துகளை தூக்கி அடிக்கவே அவர் தடுமாறினார். இதன் விளைவாக 31 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். எனினும் கடைசி வரை களத்தில் இருந்து இந்தியாவுக்கு தேவையான நேரத்தில் ஒரு பவுண்டரியை அடித்து வெற்றி பெற்றுக்கொடுத்தார்.

தினேஷ் விமர்சனம்

தினேஷ் விமர்சனம்

இந்நிலையில் சூர்யகுமாரின் வீக்னஸ் தெரிந்துவிட்டதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சூர்யகுமாரின் ஷாட் தேர்வுகள் சுவாரஸ்யமாக இருந்தது. ஆட்டம் முழுவதும் தனது வழக்கமான அதிரடி ஷாட்களை ஆட முயன்றார். ஆனால் முடியவில்லை. உதாரணத்திற்கு பெரிய மைதானத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸ் அடிக்க முயன்றார். அதுவும் 4 ஃபீல்டர்கள் லெக் சைட் பவுண்டரி திசையில் நின்றனர். அது எனக்கு சரியாக படவில்லை.

முன்னேற வேண்டும்

முன்னேற வேண்டும்

இதுபோன்ற களத்தில், அதிக தூரம் கொண்ட பவுண்டரிகளில் ஸ்வீப் ஷாட் ஆடுகிறோம் என்றால், அதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால் சூர்யகுமார் அந்த ஷாட்டில் முன்னேற்றம் பெற வேண்டும். ஒருவேளை அந்த ஷாட்டில் அவுட்டாகியிருந்தால் கடினமான சிக்ஸரை அடிக்க நினைத்தோம் என அவரே வருத்தப்பட்டிருப்பார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

பிட்ச் மிகவும் ஸ்லோவாக உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களே மெதுவாக வீசுகின்றனர். அப்படி இருக்கையில் டீப் ஸ்கெயர் லெக் திசையில் சிக்ஸ் அடிக்க முயல்கிறீர்கள். இதனால் தான் இது சூர்யகுமாரின் வழக்கமான இன்னிங்ஸ் இல்லை எனக் கூறுகிறேன். எனினும் கடைசி வரை களத்தில் இருந்து வெற்றி பெற்று தந்துவிட்டார் என தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

Story first published: Monday, January 30, 2023, 17:47 [IST]
Other articles published on Jan 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+