Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 நோ பால்கள்.. அர்ஷ்தீப் சிங் குறித்து தினேஷ் கார்த்திக் நறுக்கென போட்ட ட்வீட்.. ரசிகர்கள் ஆதரவு!

புனே: இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் செய்த தவறு குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி புனேவில் உள்ள கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்களை குவிக்க, அதனை விரட்டிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

பந்துவீச்சில் சொதப்பல்

பந்துவீச்சில் சொதப்பல்

இந்த போட்டியில் இந்தியவின் தோல்வியை விட, அர்ஷ்தீப் சிங் செய்த தவறு தான் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 2வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் மட்டும் 3 முறை நோ பால்களை வீசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தேவையின்றி 13 ரன்கள் கூடுதலாக சென்றது. இதனால் அவருக்கு மீண்டும் 19வது ஓவரில் வாய்ப்பு தரப்பட்டது.

சாதனை

சாதனை

ஆனால் 19வது ஓவரிலும் நோ பாலையே போட்டார். 19வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஷனகா ஆவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ பால் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். முழு உடற்தகுதி பெற்றுவிட்டார் எனக்கூறப்பட்ட வீரர் இப்படியா சொதப்புவது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 தினேஷ் கார்த்திக் அட்வைஸ்

தினேஷ் கார்த்திக் அட்வைஸ்

இந்நிலையில் இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில், அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது. நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கவாஸ்கர் விளாசல்

கவாஸ்கர் விளாசல்

இந்நிலையில் இதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதில், தற்போதுள்ள வீரர்கள் நிலைமை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனக்கூறுவதை கேட்டு வருகிறேன். நோ பால் வீசுவதெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நீங்கள் வீசிய பிறகு, பேட்ஸ்மேன் என்ன செய்கிறார் என்பது வேறு விஷயம். ஆனால் கையில் இருந்து பந்து போவதில் இருந்து, காலை எங்கு எடுத்து வைக்கிறோம் என்பது உங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தை கூறக்கூடாது என கவாஸ்கர் விளாசியுள்ளார்.

Story first published: Friday, January 6, 2023, 14:37 [IST]
Other articles published on Jan 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+