For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது "ஸோம்பி" ஆகிட்டாரா தினேஷ் கார்த்திக்.. பாடியை ஃபிட்டாக்க 4 வாரம் தேவையாம்!

சென்னை: உடம்பெல்லாம் அப்படியே ஸோம்பி மாதிரி இருக்கு.. விளையாட்டுக்கு ரெடியாக 4 வார காலம் குறைந்தது தேவைப்படும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கொரோனாவைரஸால் உலகமே முடங்கிப் போய்க் கிடக்கிறது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் போய் விட்டதால் வீரர்களும், வீராங்கனைகளும் உரிய பயிற்சி எடுக்க முடியாமல் வீட்டிலேயே உள்ளனர்.

போட்டிகள் எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக அனைவருக்குமே நல்ல பயிற்சி தேவைப்படும் என்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. காரணம் வீரர்கள், வீராங்கனைகள் எல்லாம் அந்த அளவுக்கு உடல் ரீதியாக தகுதியிழந்து காணப்படுகின்றனர்.

எச்சிலுக்குத் தடை விதித்தால் எப்படி.. ரொம்பக் கஷ்டம்தான்.. வாசிம் ஜாபர் ஏமாற்றம் எச்சிலுக்குத் தடை விதித்தால் எப்படி.. ரொம்பக் கஷ்டம்தான்.. வாசிம் ஜாபர் ஏமாற்றம்

ஸோம்பி மாதிரி இருக்கோம்

ஸோம்பி மாதிரி இருக்கோம்

இதைத்தான் தற்போது தினேஷ் கார்த்திக்கும் பளிச்சென கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உடம்பெல்லாம் அப்படியே ஸோம்பி மாதிரி இருக்கிறது. குறைந்தது 4 வார காலமாவது பயிற்சி எடுத்தால்தான் விளையாடுவதற்கு தகுதி கிடைக்கும். எல்லோருக்குமே இதே நிலைதான். பயிற்சி எடுக்க ஆரம்பித்ததுமே விளையாட முடியாது. படிப்படியாகத்தான் போக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ரொம்பக் கஷ்டம்

ரொம்பக் கஷ்டம்

மீண்டும் விளையாட்டுக்குத் திரும்புவது என்பது கஷ்டமான வேலையாக இருக்கும். நிறைய பயிற்சிகள் தேவைப்படும். மன ரீதியாக, உடல் ரீதியாக அனைவருமே ஃபிட்டாக வேண்டியிருக்கும். முதலில் நமது உடலை பயிற்றுவிக்க வேண்டும். பிறகு அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதன் பிறகுதான் விளையாட்டுக்குள் இறங்கவே முடியும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

சென்னையில் தற்போது நிறைய தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளனர். எனவே அனுமதி பெற்று பயிற்சியில் ஈடுபடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். படிப்படியாக இதை செய்ய வேண்டும். முழுமையாக உடம்பு முடங்கிப் போய்க் கிடக்கிறது. வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருப்பதால் இப்படி ஆகி விடும். அதை சரி செய்ய வேண்டும் என்றார் தினேஷ் கார்த்திக்.

சும்மா இருந்தால் இப்படித்தான்

சும்மா இருந்தால் இப்படித்தான்

கிட்டத்தட்ட 2 மாதமாக கிரிக்கெட் வீரர்கள் முடங்கிப் போயுள்ளனர். ஐபிஎல் தொடர் நடந்து முடிந்திருக்க வேண்டியது. அதுவும் இல்லாமல் போய் விட்டது. அடுத்தடுத்த தொடர்களுக்குள் இந்திய வீரர்கள் மூழ்கிப் போயிருப்பார்கள். அதுவும் நடக்காமல் போய் விட்டது. நாடே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. கொரோனாவும் இப்போதுதான் தீவிரமடைந்து வருவதால் யாருக்குமே எதிலுமே தெளிவு இல்லாத நிலையே காணப்படுகிறது.

Story first published: Monday, June 8, 2020, 22:49 [IST]
Other articles published on Jun 8, 2020
English summary
Dinesh Karthik said lack of activity due to the coronavirus-forced lockdown has put the body in a "zombie mode"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X