Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னது மீண்டும் ஒரு முறையா? உலககோப்பைக்கு திரும்பும் தினேஷ் கார்த்திக்.. டிவிட்டரில் பதிவு

மும்பை : உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி எந்த விக்கெட் கீப்பரை பயன்படுத்தும் என்று இன்றுவரை யாருக்குமே தெரியவில்லை. ஏன் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா கூட இதற்கான பதில் தெரியவில்லை.
.
உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர்தான் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் கே.எல் ராகுல் பார்ட் டைம் விக்கெட் கீப்பராக ஏற்கனவே அணியில் இருக்கிறார்.

Dinesh Karthik says fans can see him in world cup

இந்த நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் ரிஷப் பந்த் அணிக்கு வருவாரா இல்லையா என்பதில்தான் இருக்கிறது. இந்த நிலையில் தான் ரசிகர் ஒருவர் இந்தியாவின் விக்கெட் கீப்பராக யார் வரவேண்டும் என நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு தினேஷ் கார்த்திக் என மற்றொருவர் பதிலளித்திருந்தார்.
இதனை குறிப்பிட்ட தினேஷ் கார்த்திக் நிச்சயமாக நீங்கள் என்னை உலகக்கோப்பை தொடரில் பார்ப்பீர்கள் எனக் கூறியிருக்கிறார்.

இந்த பதிலை பார்த்தவுடன் தினேஷ் கார்த்திக் மீண்டும் கம் பேக் கொடுக்கிறாரா என ரசிகர்கள் நினைத்தனர். ஏனென்றால் டி20 உலக கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பினார். அந்த தொடர் முன்பு வரை சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், அந்த தொடரில் முக்கிய ஆட்டங்களில் தடுமாறினார்.

இதன் பிறகு இந்திய அணியில் அவர் சேர்க்கப்படுவதில்லை.இந்த நிலையில் இந்திய அணியில் அனுபவம் மிக்க நடுவரிசை வீரர்கள் இல்லாததால் தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறினர். ஆனால் அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திகை தாண்டி யோசிக்க தொடங்கிவிட்டது.

அதனால் தான் சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை தற்போது பயன்படுத்தி பார்க்கிறது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தம்மை மீண்டும் உலக கோப்பையில் பார்ப்பீர்கள் என பதிவிட்டு இருப்பது அவர் எடுத்திருக்கும் கமெண்டேட்டர் அவதாரத்தை தான் குறிப்பிடுகிறார் என தெரிகிறது. ஏனென்றால் இந்த பதிவை போட்டு கண்ணடிப்பது போல் தினேஷ் கார்த்திக் போட்டிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் தற்போது கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வர்ணனையாளராக உலகம் முழுவதும் பணியாற்றி வரும் நிலையில் மீண்டும் அவர் உலக கோப்பை தொடரில் அதே பணியை செய்ய போகிறார். ஏழு உயிர் இருப்பதாக கட்டுக்கதை வைத்திருக்கும் அண்டர்டேக்கரே ஓய்வு பெற்ற நிலையில் தினேஷ் கார்த்திக் எம்மாத்திரம் என ரசிகர்களும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Story first published: Thursday, August 10, 2023, 6:25 [IST]
Other articles published on Aug 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+