Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர் ஒரு பெரிய டார்ச்சர் சார்” முகமது ஷமி குறித்து தினேஷ் கார்த்திக் பளீச் பதில்.. அப்படி என்ன ஆனது

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் டார்ச்சரானவர் என சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். மேலும் சர்வதேச அளவில் அவரால் ஏன் ஜொலிக்க முடியவில்லை என்றும் காரணம் கூறியிருக்கிறார்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்திய ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான்.

ஷமியின் பவுலிங்

ஷமியின் பவுலிங்

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை எடுத்த சூழலில் 2வது இன்னிங்ஸில் நான் எடுக்கிறேன் என அஸ்வின் செய்துக்காட்டினார். மொத்தமுள்ள 20 விக்கெட்களில் 15 விக்கெட்களை இந்த ஸ்பின் ஜோடி தான் கைப்பற்றியது. குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

 தினேஷ் கார்த்திக் கருத்து

தினேஷ் கார்த்திக் கருத்து

இந்நிலையில் ஷமி குறித்து தினேஷ் கார்த்திக் சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். அதில், முகமது ஷமி குறித்து ஒரே வார்த்தை சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு "டார்ச்சர்". வாழ்நாளில் வலைபயிற்சிகளில் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான பவுலர் என்றால் அது ஷமி தான். வலைகளில் அவரை எதிர்த்து ஆடுவது அந்த அளவிற்கு சிரமம்.

 கோலியும் புகார்

கோலியும் புகார்

நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேன் என்றால் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலியும் ஷமிக்கு எதிராக விளையாடவே கூடாது எனக்கூறுவார்கள். முகமது ஷமி கைகளை நேராக வைத்து டெலிவரி செய்வார். இயற்கையாகவே 6 - 8 மீட்டர் லெந்த்களில் தான் வீசுவார். இதனால் அவரின் பவுலிங்கில் பெரும்பாலும் ஸ்லிப் கேட்ச்கள் அல்லது கீப்பர் கேட்ச்-கள் மூலம் தான் விக்கெட் விழும். இதுதான் அவரின் சிறப்பம்சம்.

துரதிஷ்டசாலி

துரதிஷ்டசாலி

இதே தன்மைகளால் தான் முகமது ஷமி துரதிஷ்டசாலியாகவும் இருந்துள்ளார். நிறைய முறை பந்து எட்ஜாகி பவுண்டரிகளுக்கு சென்றுவிடுகிறது. அதுவும் அதிகம் பவுன்சாகும் அயல்நாட்டு களங்களில் நிறைய எட்ஜாகிவிடுகின்றன என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 32 வயதாகும் முகமது ஷமி முற்றிலும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கப்பட்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 13, 2023, 19:16 [IST]
Other articles published on Feb 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+