Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாணவர்கள் போராட்டம் பற்றி தினேஷ் கார்த்திக் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு.. “அடுத்த 10 ஆண்டுகள்..”

சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறை முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வந்த தீவிர போராட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்தே தினேஷ் கார்த்திக் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

மாணவர்கள் போராட்டத்தை அடுத்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இந்தச் செய்தி வெளியானவுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தினேஷ் கார்த்திக், "அடுத்த பத்து ஆண்டுகள் இந்தியாவின் கையில்தான்" என்று தலைப்பிட்டுள்ளார்.

Dinesh Karthik shares emotional post about students after Education Minister Dharmendra Pradhan Resigns

மேலும் அவர், "இறுதியில் நாம் அனைவரும் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கவே உழைக்கிறோம். நமது இளம் தலைமுறையினரின் தெளிவு, கூட்டு செயல்பாடு மற்றும் தளராத மன உறுதி ஆகியவை என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது; அடுத்த தலைமுறை நம்மை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். ஜெய் ஹிந்த்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி அமைப்பினர் தலைமையில் மாணவர்கள் நடத்தி வந்த இந்த போராட்டம், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்ட 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தால் மேலும் தீவிரமடைந்தது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவு நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். அதன் பின்னரும் போராட்டத்தின் தீவிரம் குறையாத நிலையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி பலம் என்று நினைத்ததே இப்ப பலவீனமா போச்சு.. சொற்ப ரன்களில் அவுட்.. என்ன ஆச்சு?

வைபவ் சூர்யவன்ஷி பலம் என்று நினைத்ததே இப்ப பலவீனமா போச்சு.. சொற்ப ரன்களில் அவுட்.. என்ன ஆச்சு?

தினேஷ் கார்த்திக் மாணவர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக அமைச்சரின் ராஜினாமாவை குறிப்பிட்டே இந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம். ஆனால், அது குறித்து அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.

Story first published: Saturday, July 25, 2026, 17:48 [IST]
Other articles published on Jul 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+