50 ஓவர் உலககோப்பையில் விளையாடுவீர்களா? தினேஷ் கார்த்திக் அளித்த அதிர்ச்சி பதில்.. அப்படி என்ன காரணம்
நெல்லை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் , அடுத்த ஆண்டு உலககோப்பை விளையாடுவது குறித்து அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Recommended Video
3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், தற்போது, டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக விளங்கி வருகிறார்.
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் தினேஷ் கார்த்திக், டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்பதாக தமிழகம் வந்தார்.

டிஎன்பிஎல் தொடர்
இங்கு திருப்பூர் அணிக்காக சுமார் ஒரு வாரம் இருக்கும் கார்த்திக், மீண்டும் வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க செல்கிறார். ஐபிஎல், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து தொடரில் பட்டையை கிளப்பிய தினேஷ் கார்த்திக்கிற்கு இங்கிலாந்த தொடர் சரிவை தந்துள்ளது.

இங்கிலாந்தில் சரிவு
இங்கிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில் தினேஷ் கார்த்திக், 11, 12 மற்றும் 6 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், கார்த்திக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது.

50 ஓவர் உலகக் கோப்பை
இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் கார்த்திக்கின் தயவு அணிக்கு தேவைப்படுவது போல், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் கார்த்திக் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பபட்டது. 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து ஏதாவது திட்டம் இருக்கிறதா என கேள்வி கேட்கப்பட்டது.

அதிர்ச்சி பதில்
அதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு செல்லும் வரையில், இந்திய கிரிக்கெட் பற்றி எந்த பேட்டியும், கருத்தும் கூற கூடாது என்று பிசிசிஐ தம்மிடம் தனிப்பட்ட முறையில் கூறி விட்டதாக தெரிவித்தார். விராட் கோலி தொடர்பான கேள்விக்கு, அவர் மீண்டும் ஃபார்ம்க்கு திரும்புவார் என பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications