Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம்.. குறட்டை வேற.. என்னாச்சு தினேஷ் கார்த்திக்கிற்கு?

சென்னை: இன்று உலக தூக்கம் தினமாமே. அட அப்படித் தாங்க சொல்றாங்க. கூகுளும் பல்லிளித்துக் கொண்டு தான் அதைத் தான் சொல்கிறது. இந்த தினத்தில், நம்ம தினேஷ் கார்த்திக் பதிவிட்ட புகைப்படம் ஒன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில், தோனி எனும் மெகா புயலால்.. சாரி, சூறாவளியால் திக்கற்ற திசைக்கு அடித்துச் செல்லப்பட்ட திறமையான விக்கெட் கீப்பர் நம்ம ஊர் பையன் தினேஷ் கார்த்திக். துடிப்பான இளம் வீரர், டீசண்ட் பேட்ஸ்மேன், கிளாஸ் விக்கெட் கீப்பிங் என்று இந்திய அணியில் ஒரு ரவுண்டு வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் தினேஷ்.

dinesh karthik tweet goes viral on world sleep day

ஆனால், தோனி அணிக்குள் நுழைந்து, பேட்டை வான் நோக்கி சுழற்ற, கைகளை மின்னல் வேகத்தில் நகர்த்த, 'இது எங்கள் சொத்து' என்று பச்சக்கென்று கெட்டியாக பிடித்துக் கொண்டது பிசிசிஐ. அதில் தவிர்க்கமுடியா சேதாரமாகிப் போனார் தினேஷ். எனினும், ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

கடந்த 2020 சீசன் பாதி வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்தார். இந்நிலையில், இன்று 'World Sleep Day' கொண்டாடப்பட்டு வருகிறது. (டென்சன் ஆகக் கூடாது). அதை முன்னிட்டு அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாற்காலியில் அமர்ந்து, மெத்தையில் கால்களை நீட்டி, குறட்டை விட்டு, தான் தூங்குவது போன்ற புகைப்படத்தை டீவீட்டியுள்ளார்.

இதன் மூலம், இன்று மேட்ச் கூட இல்லை.. ஸோ நன்றாக தூங்குங்கள் என்று ரசிகர்களை சொல்கிறாரா? அல்லது தூங்கும் போது கூட ஜீன்ஸ் போட்டுட்டு தூங்குங்க, அதுவும் கிழிஞ்சு தச்ச ஜீன்ஸா போடுங்க-னு சொல்கிறாரா?-னு தான் தெரியல.

ரசிகர்கள் சிலரோ, பழக்கதோஷத்தில் ஸ்டேடியத்தில் வந்தும் தூங்கிடாதீங்க என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

Story first published: Friday, March 19, 2021, 17:25 [IST]
Other articles published on Mar 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+