“மஜாப்பா.. மஜாப்பா ”.. நடுவானில் தினேஷ் கார்த்திக் செய்த விஷயம்.. இணையத்தில் ட்ரெண்டிங் - வீடியோ!
ராஜ்கோட்: இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் விமானத்தில் செய்த விஷயம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
தென்னாப்பிரிக்கா 2 வெற்றிகள், இந்தியா ஒரு வெற்றி என உள்ள சூழலில் மிக முக்கியமான 4வது போட்டி இன்று நடைபெறுகிறது.

4வது டி20
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதற்காக நேற்று முன் தினம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராஜ்கோட்டிற்கு வந்தடைந்த இந்திய வீரர்கள், நேற்றில் இருந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுவாரஸ்ய வீடியோ
இந்நிலையில் இந்திய அணியில் நடந்த ஒரு விஷயம் வீடியோவாக ட்ரெண்டாகி வருகிறது. அதுவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் செய்த விஷயம் தான். ராஜ்கோட் சென்ற விமானத்தின் உள், திடீரென இருபுறம் புகைகள் கிளப்பப்பட்டன. வீரர்கள் அனைவரும் உற்சாக குரல் எழுப்ப, அந்த புகைக்குள் இருந்து தினேஷ் கார்த்திக் மாஸ் எண்ட்ரி கொடுத்து நடந்து வந்தார்.
குசும்பான கேப்ஷன்
இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கல்லூரி வைவா நேர்க்காணலில் இருந்து ரோல் நம்பர்.1 மாணவன் இதே போன்று தான் கெத்தாக வெளியே வருவார் எனக்குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களும் குசும்பு பிடித்தவர்பா இந்த தினேஷ்கார்த்திக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கலக்கி வரும் தினேஷ்
ஐபிஎல் தொடரில் கலக்கிய தினேஷ் கார்த்திக் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதுவரை நடைபெற்ற 3 போட்டியிலும் 1* (2), 30* (21), 6 (8) என ரன்களை சேர்த்துள்ளார். அடுத்ததாக வரவுள்ள அயர்லாந்து சுற்றுப்பயணத்திலும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications