Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் - தீபிகா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்.. அழகான பெயர்கள் சூடல்.. வைரலாகும் புகைப்படம்!

அமீரகம்: இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டிற்கு புதிதாக 2 ஆண் குழந்தைகள் வருகை தந்துள்ளனர்.

ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக திகழ்பவர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், பல்வேறு போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

கிரிக்கெட் பயணம்

கிரிக்கெட் பயணம்

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் தனது ஃபார்மை நிரூபித்து வருகிறார். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து, தற்போது முக்கிய வீரராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

 கமெண்டேட்டர்

கமெண்டேட்டர்

இதுமட்டுமல்லாமல் சமீப தினங்களாக வர்ணனையாளராகவும் தினேஷ் கார்த்திக் களமிறங்கியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் பல சர்வதேச போட்டிகளுக்கு அவர் கமெண்டேட்டரி கொடுத்து வருகிறார். அவரின் பேச்சினை கேட்ட பல ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடினர்.

புதிய வரவு

புதிய வரவு

இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை தினேஷ் கார்திக் அறிவித்துள்ளார். அதாவது தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், சில நாட்களிலேயே 3 ஆக (நாய் குட்டியையும் சேர்த்து) இருந்த குடும்ப எண்ணிக்கை 5 ஆக மாறியது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பெயர்களும் அறிவிப்பு

பெயர்களும் அறிவிப்பு

இதில் மற்றொரு சுவாரஸ்ய விஷயமும் அடங்கியுள்ளது. குழந்தைகளின் பெயரையும் அவர் அறிவித்துவிட்டார். தங்களது குழந்தைகளுக்கு அவர் கபிர் பல்லிக்கல் கார்த்திக் மற்றும் சியான் பல்லிக்கல் கார்த்திக் என பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, October 28, 2021, 20:40 [IST]
Other articles published on Oct 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+