Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் கடைசியா இறங்கி என்ன செய்வாருன்னு எல்லோருக்கும் தெரியும் - ஆஸி. முன்னாள் வீரர்!

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பைக்கு தயாராகி விட்டது என கேப்டன் கூறி உள்ள நிலையில், அந்த அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவது சந்தேகத்தில் தான் உள்ளது.

ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இடையே தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக யார் அணியில் இடம் பெறுவார்கள் என தெரியாத நிலையே உள்ளது.

சைமன் காட்டிச் நம்பிக்கை

சைமன் காட்டிச் நம்பிக்கை

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் உதவி பயிற்சியாளர் சைமன் காட்டிச்.

அனுபவம் பேசும்

அனுபவம் பேசும்

சைமன் காட்டிச் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆவார். அவர் கூறுகையில், "தினேஷ் மிகவும் அழுத்தமான நேரங்களில், தனது அனுபவத்தை பயன்படுத்துவார். அந்த பணியை இந்திய அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் பல முறை செய்துள்ளார்" என கூறினார்.

பந்து வீசுவது கடினம்

பந்து வீசுவது கடினம்

"அவர் கடைசி நேர பேட்டிங்கில் இறங்கி என்ன செய்வார் என எல்லோருக்கும் தெரியும். அவருக்கு அப்போது பந்து வீசுவதும் கடினம். எனவே, அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் என நம்புகிறேன்" என்றார் சைமன்.

தினேஷ் நீக்கம்

தினேஷ் நீக்கம்

தினேஷ் கார்த்திக் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை. அதனால், தினேஷ் கார்த்திக்கை அணியில் இருந்து நீக்கி விட்டார்கள். அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெற மாட்டார் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

எனினும், தினேஷ் கார்த்திக்குக்கு போட்டியாக உள்ள ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிகளில் தன் திறமையை, விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங், இரண்டிலும் இதுவரை நிரூபிக்கவில்லை. எனவே, தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்பா ஆடுற தினேஷ் கார்த்திக் வேணுமா? அனுபவம் இல்லாத ரிஷப் பண்ட் வேணுமா? முடிவு பண்ணிக்குங்க!

Story first published: Friday, March 15, 2019, 13:20 [IST]
Other articles published on Mar 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+