Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ் தெரியும்.. அது என்ன நடராஜர் சிக்ஸ்..? வைரலாகும் வீடியோ

கொல்கத்தா:தினேஷ் கார்த்திக் அடித்த நடராஜர் ஸ்டைல் சிக்ஸ் வீடியோ இணையத்தை வெகு வேகமாக கலக்கி வருகிறது.

ஐபிஎல் டி20 தொடரில் முக்கிய லீக் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மோதின.

1
45919

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரர்களான க்றிஸ் லின் மற்றும் சுபமன் கில் அடுதடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

இதையடுத்து நிதிஷ் ரானா மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூட்டணி ஜோடி சேர்ந்து ஆடியது. ஆனால் நிதிஷ் ரானா 21 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் கூட்டணி நிதானமாக விளையாடியது.

சிக்சர் மழை

சிக்சர் மழை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 18வது ஓவர் வரை நிதானமாக ஆடினார். கடைசி 2 ஓவரில் தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கதி கலங்க செய்தார்.

97 ரன்கள் சேர்ப்பு

97 ரன்கள் சேர்ப்பு

இவர் இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 97ரன்களை சேர்த்து கொல்கத்தா அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். இருப்பினும் இந்த போட்டியில் கொல்கத்தா தோற்று போனது.

தோனி சிக்ஸ்

ஆனாலும், போட்டியின் போது அவர் அடித்த ஒரு சிக்சர் தான் ஏக ஹைலைட். தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ் பார்த்திருக்கிறோம். கைகளை தட்டி அக மகிழ்ந்திருக்கிறோம்.

நடராஜர் சிக்ஸ்

நடராஜர் சிக்ஸ்

அதை முந்தும் விதமாக தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் இருந்திருக்கிறது. அந்த சிக்சுக்கு நடராஜர் சிக்ஸ் என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது. ஐபிஎல் இணையத்தில் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

Story first published: Friday, April 26, 2019, 11:03 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+