For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2003 உலகக்கோப்பையில் ஆடிய இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு.. இரக்கம் காட்டாத பிசிசிஐ.. அதிர்ச்சி தகவல்!

Recommended Video

Dinesh Mongia retired from all forms of cricket

மும்பை : 2003 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய தினேஷ் மோங்கியா அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் தன் ஓய்வை அறிவித்தார்.

இவரது ஓய்வுக்குப் பின் சுமார் 12 ஆண்டு கால சோகம் அடங்கி உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

கடைசியாக 2007இல் தான் உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக ஆடி இருந்தார் தினேஷ் மோங்கியா. அதன் பின் பிசிசிஐ தடையால் அவருக்கு எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2003 உலகக்கோப்பையில் ஆடினார்

2003 உலகக்கோப்பையில் ஆடினார்

2003 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அந்த அணியில் இடம் பெற்று பெரும்பாலான போட்டிகளில் ஆடி இருந்தார் தினேஷ் மோங்கியா. அந்த தொடரில் விவிஎஸ் லக்ஷமனை நீக்கி விட்டு, இவர் அணியில் தேர்வு செய்யப்பட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஜிம்பாப்வே சதம்

ஜிம்பாப்வே சதம்

1995 முதல் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்த தினேஷ் மோங்கியா 2001இல் இந்திய அணிக்குள் நுழைந்தார். 2002இல் தன் முதல் மற்றும் ஒரே ஒரு சதத்தை (159 ரன்கள்) ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்தார்.

2007 இந்திய கிரிக்கெட் லீக்

2007 இந்திய கிரிக்கெட் லீக்

அதன் பின் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் ஆடிய தினேஷ் மோங்கியா, அடுத்து கபில் தேவ், பிசிசிஐக்கு போட்டியாக துவங்கிய இந்திய கிரிக்கெட் லீக்கில் இணைந்து போட்டிகளில் பங்கேற்றார்.

பிசிசிஐ தடை

பிசிசிஐ தடை

இந்திய கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் அப்போது தடை விதித்தது பிசிசிஐ. அது பெரிய சர்ச்சை ஆனது. அதனால், பெரிய அளவில் பாதிக்கப்பட்டார் தினேஷ் மோங்கியா.

மற்ற வீரர்களுக்கு மன்னிப்பு

மற்ற வீரர்களுக்கு மன்னிப்பு

பின்னர், பிசிசிஐ இந்திய கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஆடிய வீரர்களுக்கு மன்னிப்பு வழங்கி மீண்டும் முத்த தர கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல்-இலும், சர்வதேச கிரிக்கெட் போடிட்களிலும் கூட ஆட வாய்ப்பு அளித்தது.

இரக்கம் காட்டாத பிசிசிஐ

இரக்கம் காட்டாத பிசிசிஐ

ஆனால், தினேஷ் மோங்கியா பல முறை மன்னிப்பு கேட்டும், பிசிசிஐ அவருக்கு மட்டும் மன்னிப்பு வழங்கவில்லை. கடைசியாக 2017இல் பிசிசிஐ-க்கு இது குறித்து கடிதம் எழுதி இருந்தார் தினேஷ் மோங்கியா. அப்போதும் பிசிசிஐ மன்னிப்பு அளிக்கவில்லை.

2007இல் கடைசி போட்டி

2007இல் கடைசி போட்டி

கடைசியாக 2007இல் தன் கடைசி முதல் தர போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடி இருந்தார் மோங்கியா. இந்திய கிரிக்கெட் லீக்கில் இடம் பெற்ற வீரர்களில் மன்னிப்பு பெறாத ஒரே வீரர் இவர் மட்டும் தான் என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது தெரிய வந்துள்ளது.

அம்பதி ராயுடு கதை என்ன?

அம்பதி ராயுடு கதை என்ன?

அம்பதி ராயுடுவும் இந்திய கிரிக்கெட் லீக்கில் ஆடியவர் தான். அவரும் அந்த லீக் கிரிக்கெட்டில் ஆடியதற்காக தடை செய்யப்பட்டு, பின்னர் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் ஆடி வருகிறார். அது போன்ற வாய்ப்பு தினேஷ் மோங்கியாவுக்கு அளிக்கப்படவில்லை.

குவித்த ரன்கள்

குவித்த ரன்கள்

கடந்த 1995 முதல் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த தினேஷ் மோங்கியா 8,028 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1230 ரன்கள் எடுத்துள்ளார். ஒரே ஒரு டி20யில் ஆடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கடைசி வரை வாய்ப்பு பெறவில்லை.

ஓய்வை அறிவித்தார்

ஓய்வை அறிவித்தார்

தன் கடைசி கிரிக்கெட் போட்டியை ஆடி 12 ஆண்டுகள் ஆன நிலையில், ஓய்வை அறிவித்துள்ளார் தினேஷ் மோங்கியா. பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பு, கடந்த சீசனில் இவரை தேர்வுக் குழுவில் சேர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 18, 2019, 14:48 [IST]
Other articles published on Sep 18, 2019
English summary
Dinesh Mongia retired from all forms of cricket and a shocking fact behind his retirement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+