For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட்... காரைக்குடிக்கு விளையாடுகிறார் தினேஷ் கார்த்திக்!

டிஎன்பிஎல் சீசன் 3 ஜூலை 11ல் துவங்குகிறது. இதற்கான ஏலம் நடந்தது. அதில் காரைக்குடி காளைக்காக தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார்.

Recommended Video

ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து தமிழ்நாடு பிரீமியர் போட்டிகள் தொடங்க உள்ளது- வீடியோ

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசனுக்கான அணிகளை தேர்வு செய்யும் ஏலம் நடந்தது. இதில், தினேஷ் கார்த்திக்கை, ஐடிரீம் காரைக்குடி காளை அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் பாணியில் நடக்கும் டிஎன்பிஎல் போட்டியின் மூன்றாவது சீசன் ஜூலை 11ம் தேதி துவங்குகிறது. முதல் சீசனில் டூடி பேட்ரியாட்ஸ் அணியும், கடந்த சீசனில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் கோப்பையை வென்றன.

மூன்றாவது சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று நடந்தது. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் இடம்பெறுவதற்கான ஏலத்தில் 772 வீரர்கள் பங்கேற்றனர். அதில் 128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல்லில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு, பிளே ஆப் சுற்று வரை கொண்டு சென்ற தினேஷ் கார்த்திக், பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், வாஷி்ங்டன் சுந்தர் போன்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், டிஎன்பிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், சர்வதேசப் போட்டிகளில் விளையாட உள்ளதால், டிஎன்பிஎல்லில் அவர்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது.

டிஎன்பிஎல்லில் பங்கேற்கும் அணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள்.

டூடி பேட்ரியார்ட்ஸ்

டூடி பேட்ரியார்ட்ஸ்

ஆனந்த் சுப்ரமணியன், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி, சாய் கிஷோர், ஆர். சதீஷ். அதிசயராஜ் டேவிட்சன், அக் ஷய் ஸ்ரீனிவாசன், மாலோலன் ரங்கராஜன், ஆஷித் ராஜிவ், யு.சுஷில், தினேஷ், எஸ். அபிஷேக், ஏ. வெங்கடேஷ், நிதிஷ், ஆர். ஜேசுராஜ், எஸ். பூபாலன், ஷப்னம் மேத்தா.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

எஸ். கார்த்திக், சசிதேவ், அலெக்சாண்டர் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். விஜய் சங்கர், கோபிநாத், எம். அஸ்வின், ஹரிஷ் குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சன்னி குமார் சிங், சம்ருத் பட், வி. அருண்குமார், ஆர்.விஷால், பி. ராகுல், எம். சித்தார்த், பி. அருண், ஏ. ஆரிப், எம்கே சிவகுமார், மானவ் பராக், சாய் சுதர்சன்.

லைகா கோவை கிங்ஸ்

லைகா கோவை கிங்ஸ்

ரோஹித் ரவிகுமார், பிரதோஷ் ரஞ்சன் பால், எஸ். அஜித் ராம் தக்க வைக்கப்பட்டுள்ளனர். ஆண்டனி தாஸ், டி. நடராஜன், அபினவ் முகுந்த், கே. விக்னேஷ், ஷாருக் கான், அகில் ஸ்ரீநாத், சுரேஷ் குமார், ஆர். மிதுன், சுரேஷ் பாபு, சுமந்த் ஜெயின், ராஜேஷ், அஸ்வின் வெங்கட்ராமன், எம். ராஜா, ஆர். சத்யநாராயண், முகமது அத்னான் கான், மணிகண்டன்.

சியாசெம் மதுரை பாந்தர்ஸ்

சியாசெம் மதுரை பாந்தர்ஸ்

கேபி அருண் கார்த்திக், ஷீஜித் சந்திரன், ஆர். கார்த்திகேயன் தக்க வைக்கப்பட்டுள்ளனர். சிவி வருண், அபிஷேக் தன்வார், ராஹில் ஷா, தலைவன் சற்குணம், ஜே கவுசிக், ஆர்எஸ் ஜெகன்னாத், எஸ். நிலேஷ், டி. ரோஹித், எஸ்.பி. நாதன், துஷார் ரஹேஜா, கிரண் ஆகாஷ், லோகேஷ் ராஜ், எஸ்.எஸ். கர்னாவர், விக்ரம் ஜாங்கிட், எம்.எஸ். பிரமோத், பி.எஸ். சிவராமகிருஷ்ணன்.

திருச்சி வாரியர்ஸ்

திருச்சி வாரியர்ஸ்

பாபா இந்திரஜித், பரத் சங்கர், கே. விக்னேஷ் தக்க வைக்கப்பட்டுள்ளனர். சோனு யாதவ், எம்எஸ் சஞ்சய், முரளி விஜய், ஜி. கணபதி, எஸ். சுரேஷ் குமார், வசந்த் சரவணன், எஸ். அரவிந்த், எம். லட்சுமிநாராயணன், எல். விக்னேஷ், டி.டி. சந்திரசேகர், ஏ. அஸ்வின் கிறிஸ்ட், கே. மணிபாரதி, பி. சரவணகுமார், ஏ.எஸ். கோவிந்தராஜன், ஆர்.எஸ். திலக், வி. ஆகாஷ்.

காஞ்சி வீரன்ஸ்

காஞ்சி வீரன்ஸ்

பாபா அபராஜித் தக்க வைக்கப்பட்டுள்ளார். எஸ். லோகேஷ்வர், விஷால் வைத்தியா, ஆர். ஆஷிக் ஸ்ரீநிவாஸ், சுப்ரமணிய சிவா, யு. முகிலேஷ், சுனில் சாம், எஸ். அருண், தீபன் லிங்கேஷ், பிரான்சிஸ் ரோகின்ஸ், எஸ். சித்தார்த், ஆர். திவாகர், மோகித் ஹரிகரன், எஸ். சந்திரசேகர், ஆர். அஸ்வந்த், யு. விஷால், சி. ஸ்ரீராம்.

திண்டுக்கல் டிராகன்ஸ்

திண்டுக்கல் டிராகன்ஸ்

ஆர். அஸ்வின், என். ஜெகதீசன், ஆர். விவேக் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். என்.எஸ். சதுர்வேதி, சி. ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், எம். முகமது, ஆர். ரோஹித், ஆதித்யா அருண், எம். அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாக், யாஷ் அருண்மொழி, சுஜேந்திரன், ஜே. கவுசிக், என். ராமகிருஷ்ணன், ரா. அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாத்ரி.

ஐடிரீம் காரைக்குடி காளை

ஐடிரீம் காரைக்குடி காளை

ஆர். ராஜ்குமார், எம். ஷாஜகான், எஸ். மோகன் பிரசாத் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். தினேஷ் கார்த்திக், எஸ். அனிருதா, யோ மகேஷ், ஆர். கவின், எல். சூர்யபிரகாஷ், லக்ஷ்மண், வி. ஆதித்யா, எஸ்,. கிருஷண் குமார், ராதாகிருஷ்ணன், மான் கே பாப்னா, அஸ்வத் முகுந்தன், எஸ். சுவாமிநாதன், டி. அஜித் குமார், எஸ். கணேஷ், ஆர். ஸ்ரீனிவாசன், பி. முருகேஷ்.

Story first published: Friday, June 1, 2018, 12:04 [IST]
Other articles published on Jun 1, 2018
English summary
TNPL season 3 to start on july 11. Dinesh karthick to play for karaikudi.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+