Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேச்சே, கிரிக்கெட்டே எனக்குப் பிடிக்காதுப்பா.. திணேஷைப் பார்க்கும் வரை.. தீபிகா

டெல்லி: திணேஷ் கார்த்திக்கைப் பார்க்கும் வரை, அவரைச் சந்திக்கும் வரை, அவருடன் பேசும் வரை எனக்குக் கிரிக்கெட்டை அறவே பிடிக்காது என்று மனம் திறந்து கூறியுள்ளார் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்.

திணேஷ் கார்த்திக்கை விரைவில் மணக்கவிருக்கிறார் தீபிகா. இருவருக்கும் இடைய நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. இது காதல் திருமணம்.. திணேஷுக்கு இது 2வது திருமணம்.. தீபிகாவுக்கு இதுதான் முதல் திருமணம்.

இவர்களின் திருமணம் சென்னையில் நவம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திணேஷ் குறித்தும், காதல் குறித்தும், மனம் திறந்து பேசியுள்ளார் தீபிகா. பேட்டியிலிருந்து.....

கிரிக்கெட்டே பிடிக்காதுப்பா..

கிரிக்கெட்டே பிடிக்காதுப்பா..

எனக்கு முதலில் கிரிக்கெட்டே பிடிக்காது. கிரிக்கெட் வீரர்களையும் பிடிக்காது. அது என்னவோ சிறு வயதிலிருந்தே அப்படித்தான்.

மற்ற விளையாட்டுக்களைக் கபளீகரம் செய்யும் கிரிக்கெட்

மற்ற விளையாட்டுக்களைக் கபளீகரம் செய்யும் கிரிக்கெட்

மற்ற விளையாட்டுக்களையும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும், அவர்களின் சாதனைகளையும் கிரிக்கெட் கபளீகரம் செய்வதாக எனக்கு ஒரு எண்ணம்.

ஆனால்...

ஆனால்...

ஆனால் திணேஷ் கார்த்திக்கைப் பார்த்த நொடியிலிருந்து எனது எண்ணம் மாறி விட்டது. திணேஷ் மிகவும் எளிமையானவர், சாதாரணமானவராக இருக்கிறார். குடும்பத்துக்கேற்றவர். பார்த்ததுமே எனக்கு திணேஷைப் பிடித்து விட்டது.

எல்லாமே ஸ்பீடுதான்

எல்லாமே ஸ்பீடுதான்

எனக்கும், திணேஷ் கார்த்திக்கும் இடையிலான காதல் தோன்றியதும் சரி, அதை இரு வீட்டார் ஒப்புக் கொண்டதும் சரி, திருமணம் நிச்சயமானதும் சரி.. எல்லாமே வேகமாக முடிந்து விட்டது. எல்லாம் நல்லதுக்கு்தாதன். இருவருமே இதில் சந்தோஷமாக உள்ளோம்.

ஜிம்மில் வைத்து

ஜிம்மில் வைத்து

எங்களது முதல் சந்திப்பே ஜிம்மில்தான் நடந்தது. அப்போது பெரிதாக இருவரும் பீல் செய்யவில்லை. ஆனால் அதன் பிறகுதான் இருவருக்குள்ளும் உணர்வுகள் ஊற்றெடுத்தன. காதலில் விழுந்தோம்.

பை கூட சொல்லலையே...

பை கூட சொல்லலையே...

ஜிம்மில் நடந்த சந்திப்பின்போது ரொம்பவும் கேஷுவலாகத்தான் இருந்தோம். நான் போகும்போது அவருக்கு ஒரு பை கூட சொல்லவில்லை.

பிப்ரவரியில்தான்...

பிப்ரவரியில்தான்...

ஆனால் பிப்ரவரி மாதம் நான் கனடாவில் நடந்த ஸ்குவாஷ் போட்டியில் வென்றிருந்தன். பின்னர் ஒரு வார பயிற்சிக்காக நான் லீட்ஸ் போயிருந்தேன். அங்கு எதிர்பாராதவிதமாக திணேஷைப் பார்த்தேன்.

என்னமோ நடக்குதே...

என்னமோ நடக்குதே...

ஆனால் உண்மை என்னவென்றால் என்னைப் பார்க்க அவர்தான் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். அது எனது மனதைத் தொட்டு விட்டது. ஏதோ நடக்கிறது என்று எனக்குள் அப்போதுதான் மனதுக்குள் தோன்றியது.

என்னைப் பார்த்தபடி.. திணேஷ்

என்னைப் பார்த்தபடி.. திணேஷ்

நான் பயிற்சி பெற்ற அந்த ஒரு வாரமும் அங்கு வருவார் திணேஷ். நான் பயிற்சி பெறுவதைப் பார்த்தபடி இருப்பார். நான் விளையாடுவதை ரசிப்பார். அவரும் கூட ஸ்குவாஷ் ஆடிப் பார்த்தார். உண்மையில் என்னை விட நன்றாகவே ஆடினார்.

அதுக்குப் பிறகு...

அதுக்குப் பிறகு...

அதன் பிறகு இருவருமே நெருங்கி விட்டோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம். இருவருமே விளையாட்டுக்காரர்கள் என்பதால் நட்பு மேலும் இறுகியது. காதலாக அது மலர்ந்தது என்றார் தீபிகா புன்னகையுடன்.

Story first published: Sunday, April 27, 2014, 13:53 [IST]
Other articles published on Apr 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+