Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடக்க வீரராக சொதப்பிய ரிஷப் பண்ட்.. மாஸ் காட்டிய இஷான் கிஷன்..அனல் பறந்த ஆட்டம்

மவுண்ட் மாவுங்குனி : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக புதிய ஜோடிகள் இன்று களம் இறங்கியது.

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர்களான கே எல் ராகுல், ரோகித் சர்மா சொதப்பியது தான் என்று பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்து தொடரில் புதிய ஜோடியாக ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

புதிய ஜோடி

புதிய ஜோடி

மற்றொரு வீரராக சுப்மான் கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷாந்த் கிஷனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் பந்துகளை எதிர்கொள்ள சற்று தடுமாறினர். நியூசிலாந்து வீரர்கள் டிம் சவுதி ,ஆடம் மிலன் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர். ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஆனால் ரிஷப் பண்ட், பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினார்.மறுமுனையில் இஷாந்த் கிஷன் முதலில் பொறுமை காத்தாலும் அதன் பிறகு அதிரடியை காட்டினார்.குறிப்பாக பெகுர்சன் வீசிய பந்தை இஷாந்த் கிஷன் சிக்ஸருக்கு விரட்டினார். இதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் நீசம் வீசிய ஏழாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை இஷான் கிஷன் அடித்தார்.

பண்ட் சொதப்பல்

பண்ட் சொதப்பல்

மறுமுனையில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பந்த் 13 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஆறு ரன்களை மட்டுமே அடித்தார்.இதில் ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும். பந்தை தூக்கி அடித்த போது பண்ட் கேட்ச் ஆகி வெளியேறினார்.நடு வரிசையில் தான் பண்ட்க்கு ஏற்ற சூழல் இல்லை என்று தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுத்தால், அங்கேயும் பண்ட் சொதப்பி இருப்பது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.

சூர்யகுமார் அதிரடி

சூர்யகுமார் அதிரடி

ரிஷப் பண்ட் தன்னுடைய பழைய பார்மை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் அடுத்து சூரியகுமார் யாதவ் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். சூரியகுமார் யாதவும் பந்தை எதிர்கொள்ள முதலில் சிரமப்பட்டார். எனினும் தனது 360 டிகிரி ஷார்ட்டுகளை பயன்படுத்த தொடங்கினார். இந்திய அணி 6 புள்ளி 4 ஓவரில் 50 ரன்கள் ஒரு விக்கெட் இழந்த நிலையில் மலை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது.

Story first published: Sunday, November 20, 2022, 13:32 [IST]
Other articles published on Nov 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+