Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களை ஏமாற்றிய ரிஷப் பண்ட்.. தங்கம் போன்ற வாய்ப்பை வீணடித்தார்.. மொக்கை வாங்கிய கம்பீர்

மெல்போர்ன் : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் ஆட்டத்தை இந்திய வீரர் ரிஷப் பண்ட் தொடங்கினார்.

டாஸ் வீசும் போது, கேப்டன் ரோகித் சர்மா, இன்று தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார் என்று கூறிய போது, மெல்போர்ன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தனர்.

ரிஷப் பண்ட்க்கு இதுவரை வாய்ப்பு வழங்கவில்லை என்பதால் இன்றைய ஆட்டத்தில் கொடுத்தோம் என்று ரோகித் கூறினார்.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

ரோகித்தின் அறிவிப்பு குறித்து பேசிய கவுதம் கம்பீர், இது சிறந்த முடிவாக நான் கருதுகிறேன். இதனை ரோகித் முன்பே செய்திருக்க வேண்டும் என்று கூறினார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் தான் சிறந்த தேர்வு என்றும் அவர் கூறினார். ரிஷப் பண்ட் இன்று தனது திறமையை நிரூபித்தால் அரையிறுதியிலும் இடம்பெற்று இருப்பார்.

அபாரமான கேட்ச்

அபாரமான கேட்ச்

அதே போல் இந்தியா பேட்டிங் செய்யும் போது 95 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. கைவசம் 7 ஓவர்களுக்கு மேல் இருந்த நிலையில், ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி தனது இருப்பை உறுதி செய்ய நல்ல வாய்ப்பு அமைந்தது. ஆனால், இதனை சிறப்பாக வீணடித்தார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட் ஏமாற்றினார் என்று சொல்வதை விட, ரின் புருலின் அபார கேட்சால் தான் அவர் ஆட்டமிழந்தார் என்று சொல்லலாம்.

3 ரன்னில் அவுட்

3 ரன்னில் அவுட்

எனினும் ரிஷப் பண்ட் போன்ற வீரர் அடிக்கும் பந்து பார்வையாளர்கள் மாடத்தில் விழ வேண்டாமா, ஆனால் பெரிய மைதானம் என்பதால் அது எல்லை கோட்டுக்கு அருகே தான் சென்றது. 5 பந்துகளை எதிர்கொண்ட பண்ட், 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதனால் அரையிறுதியில் ரிஷப் பண்ட்க்கு இடம் கிடைக்காது.

மாற்றி கொள்வாரா பண்ட்?

மாற்றி கொள்வாரா பண்ட்?

ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி தனது திறமையை நிரூபித்தது போல், இன்னும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தன்னை நிலை நிறுத்தி கொள்ளவில்லை. ரிஷப் பண்ட் முற்றிலுமாக தனது யுத்தியை மாற்றி கொண்டால் மட்டுமே , அவர் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட முடியும்.

Story first published: Sunday, November 6, 2022, 17:13 [IST]
Other articles published on Nov 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+