Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்... நியூசிலாந்து தொடர்... பிராவோ வெளியேற்றம்... காயம் காரணம்

ஈடன் பார்க் : வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி நியூசிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் துவங்கவுள்ளன.

முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரும் தொடர்ந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ள டுவைன் பிராவோ இடம்பெற மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோமாரியோ ஷெப்பர்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

காயம் காரணமாக பிரோவோ நீக்கம்

காயம் காரணமாக பிரோவோ நீக்கம்

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே சார்பில் விளையாடிவந்த டுவைன் பிராவோ கடந்த போட்டியின்போது இடுப்பில் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்தே விலகியுள்ளார். இதையடுத்து அவர் தனது நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரோமாரியோ ஷெப்பர்ட் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

டி20, டெஸ்ட் தொடர்கள்

டி20, டெஸ்ட் தொடர்கள்

அடுத்த மாதம் 27ம் தேதி நியூலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரிலும் அடுத்ததாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரிலும் மோதவுள்ளன.

டிசம்பர் 3ல் டெஸ்ட் தொடர் துவக்கம்

டிசம்பர் 3ல் டெஸ்ட் தொடர் துவக்கம்

முதலில் துவங்கும் டி20 போட்டி ஈடன் பார்க்கில் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகள் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பே ஓவலில் நடைபெறவுள்ளன. இதை தொடர்ந்து டிசம்பர் 3 மற்றும் 11 ஆகிய தேதிகளில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர் திட்டமிடலில் நியூசிலாந்து

தொடர் திட்டமிடலில் நியூசிலாந்து

இதையடுத்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்துடனும் நியூசிலாந்து அணி தொடர்களை திட்டமிட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, இந்த தொடர்களின் மூலம் தன்னுடைய புள்ளிகளை உயர்த்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, October 22, 2020, 17:42 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+