Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரசியலில் திமுக, அதிமுக போல்..கிரிக்கெட்டிலும் தோல்வியை தழுவிய சிஎஸ்கே, மும்பை.. ரசிகர்கள் கோபம்

மும்பை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் எப்படி எதிர்பாராத தோல்வியை தழுவியதோ, அதேபோல் விளையாட்டு உலகிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. தமிழ்நாடு அரசியலில் ஆதிக்கம் செலுத்திய இது மாபெரும் கட்சிகளாக இருந்த திமுக, அதிமுக தற்போது 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்சியில் இரு கட்சியும் அமர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசியலில் இந்த இரு ஜாம்பவான்களும் எப்படி சரிவை சந்தித்தார்களோ, அதே போல் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்விகளை சந்தித்து வருகிறது. ஐபிஎல் தொடரையே ஆண்ட இந்த இரண்டு அணிகள் தங்களுக்குள் பத்து கோப்பையை வென்றிருக்கிறது.

இப்படி பல்வேறு பெருமைகளை பெற்ற இந்த அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2020 ஆம் ஆண்டு தான் ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன் பிறகு ஆறு ஆண்டுகள் அந்த அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு கடைசியாக கோப்பையை வென்றது.

அதன் பிறகு நடைபெற்ற மூன்று சீசன்களிலும் ஒரு முறை கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் எப்படி அரசியல் உலகத்தில் திமுக அதிமுக தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகிறார்களோ, அதை போல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களை மறுபரிசீலனை செய்து கொண்டு பல்வேறு அதிரடி மாற்றங்களை எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் தங்களுடைய பயிற்சியாளர் குழுவை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை போன்று மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறும் போது சிஎஸ்கே மற்றும் மும்பை அணி முற்றிலும் வீரர்களை மாற்றி புதிய ரத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோன்று தங்கள் இரு அணிகளும் சரியான கேப்டனை நியமிக்கவில்லை என்றும் சிஎஸ்கே அணி ருதுராஜையும் மும்பை அணி ஹர்திக் பாண்டியாவையும் நீக்கி புதிய கேப்டனை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்த இரண்டு ஜாம்பவான்களும் இல்லாத நிலையில் புல்ல பூச்சிகள் எல்லாம் தற்போது வாலை ஆட்டி வருவதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, May 21, 2026, 23:56 [IST]
Other articles published on May 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+