Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ், ரிஷப் பந்து அதிரடியால் டெல்லி வென்றது... மழையால் ராஜஸ்தான் தோற்றது!

Recommended Video

அதிரடி காட்டிய டெல்லி... ராஜஸ்தான் போராடி தோல்வி

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீனில் வாழ்வா, சாவா என்ற நிலையில் நடந்த ஆட்டத்தில், மழை குறுக்கிட்டதால் பாதிக்கப்பட்டபோதும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது.

ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசனில் இதுவரை 31 ஆட்டங்கள் முடிந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 ஆட்டங்களில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

1
43442

ஐபிஎல் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் சாம்பியனாகும் கனவுடன் களமிறங்கியுள்ளது.

இதுவரை ஒருமுறைகூட பைனல்ஸ் நுழையாத டெல்லி அணி இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் களமிறங்கியுள்ளது.

கேப்டன் பதவி போச்சு

கேப்டன் பதவி போச்சு

டெல்லி அணி 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்று, 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது. அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். அதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனானார். அஜிங்யா ரஹானே கேப்டனாக உள்ள ராஜஸ்தான் 7ல் மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருந்தது.

வாழ்வா சாவா போட்டி

வாழ்வா சாவா போட்டி

இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதின. மழை குறுக்கிட்ட அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது. இனி நடக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் இரு அணிகள் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி என்பது, இரு அணிகளுக்கும் வாழ்வா - சாவா என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.

ஸ்ரேயாஸ், ரிஷப் பேயாட்டம்

ஸ்ரேயாஸ், ரிஷப் பேயாட்டம்

டெல்லியில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. திடீர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பிருத்வி ஷா 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 50, ரிஷப் பந்த் 29 பந்துகளில் 69 ரன்கள் குவித்து பேயாட்டம் ஆடினர். டெல்லி 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை குறுக்கிட்டது.

டெல்லிக்கு மூன்றாவது வெற்றி

டெல்லிக்கு மூன்றாவது வெற்றி

அதனால் ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதல் பந்தில் இருந்தே ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். அவர் 26 பந்துகளில், 4 பவுண்டர், 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டமிழந்தபிறகு, ஸ்கோர் வேகம் குறைந்தது. கடைசியில் 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெல்லி அணி 4 ரன்களில் இந்த சீசனில் மூன்றாவது வெற்றியைப் பெற்றது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Thursday, May 3, 2018, 0:50 [IST]
Other articles published on May 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+