Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்ரிடிக்கு “பூம் பூம் அப்ரிடி”ன்னு பட்டம் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

டெல்லி : பாகிஸ்தான் அணியின் ஷாஹித் அப்ரிடி அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர். அதிக சிக்ஸ் அடித்த பட்டியலில் கூட அப்ரிடி தான் இன்னும் முதல் இடத்தில் இருக்கிறார்.

அவரது அதிரடி ஆட்டத்தால், அவருக்கு "பூம் பூம்" அப்ரிடி என்று பட்டப்பெயர் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது என தெரியாவிட்டாலும், பலர் "பூம் பூம் அப்ரிடி" என்றே அவரை பற்றி கூறும் போது குறிப்பிட்டு வந்தனர்.

Do you know how gave Boom Boom title to afridi?

தற்போது அது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. ட்விட்டரில் ஒரு ரசிகர் அப்ரிடியிடம், "உங்களுக்கு யார் பூம் பூம் என பட்டம் கொடுத்தது?" என கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அப்ரிடி, "ரவி சாஸ்திரி" என கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரி தற்போது பயிற்சியாளராக இருந்தாலும், முன்பு வர்ணனையாளராக இருந்தார். நீண்ட காலம் அந்தப் பணியில் இருந்த அவர், தனித்துவமான பல வர்ணனைகளை, வாக்கியங்களை பயன்படுத்துவதில் வல்லவர். அதே போல, அப்ரிடிக்கு "பூம் பூம்" அப்ரிடி என பெயர் கொடுத்துள்ளார் அவர்.

அப்ரிடி ஒருநாள் போட்டிகளில் 351 சிக்ஸர்களும், டி20யில் 73 சிக்ஸர்களும் அடித்து இருக்கிறார். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 476 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். சில மாதங்கள் முன்பு கிறிஸ் கெயில் இவரது அதிக சிக்ஸ் சாதனையை சமன் செய்தார். எனினும், இன்னும் முறியடிக்கவில்லை.

Story first published: Wednesday, August 29, 2018, 16:13 [IST]
Other articles published on Aug 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+