என்னங்க சொல்றீங்க.. கோலி போட்டுள்ள வாட்ச்சின் விலை இவ்வளவா.. ?!
டெல்லி: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி குறித்த ஒரு பழைய செய்திதான் இது. இதில் புதிதாக எதுவும் இல்லை. ஆனால் இப்போது திடீரென இதை வைரலாக்கி வருகின்றனர். அதாவது அவரது வாட்ச்சின் விலை குறித்த செய்திதான் இது.
விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அதிரடி பேட்ஸ்மேன். அபாரமான கேப்டன்.. என கலக்கி வரும் விராட் கோலிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
ரொம்ப ஸ்டைலிஷாக இருப்பதை விரும்புவார் விராட் கோலி. டிரஸ்ஸிங்காக இருந்தாலும் சரி, ஹேர்ஸ்டைலாக இருந்தாலும் சரி, பயன்படுத்தும் பொருட்களாக இருந்தாலும் கூட அதில் ஒரு ஸ்டைலை வைத்திருப்பார்.]

சூப்பர் வாட்ச்
அவரிடம் உள்ள கலெக்ஷனைப் பார்த்தால் மலைத்துப் போய் விடுவீர்கள். டிரஸ், வாட்ச்சுகள் என எல்லாமே தினுசு தினுசாக இருக்கும். அதில் இப்போது நாம் பார்க்கப் போவது அவரது வாட்ச்சைப் பற்றித்தான். கோலியிடம் ஒரு ரோலக்ஸ் வாட்ச் உள்ளது. ரோலக்ஸ் டைடோனா ரெயின்போ வாட்ச் அது. தங்க முலாம் பூசப்பட்ட வாட்ச். அதில் டயல் சபையரால் ஆனது.

விலை கம்மிதான்
மேலும் வாட்ச்சுக்குள் வைரக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. வாட்ச்சில் உள்ள எல்லா ஐட்டமும் படு காஸ்ட்லியானவை. மேலும் தண்ணீர் உள்ளே போகாத அளவுக்கு சூப்பர் பாதுகாப்பு அம்சமும் கொண்டது. இந்த வாட்ச்சின் விலை என்ன தெரியுமா.. ஜஸ்ட் 69 லட்சத்து 12 ஆயிரம் மட்டுமே. இந்த வாட்ச்சில் ஏகப்பட்ட வசதிகளும் உள்ளன. உலகின் காஸ்ட்லியான வாட்ட்சுகளில் இதுவும் ஒன்றாம்.

தோனியிடமும் சூப்பர் வாட்ச்
இதே மாதிரிதான் நம்ம தல தோனியும் கூட காஸ்ட்லியான வாட்ச் வைத்துள்ளார். அந்த வாட்ச்சின் விலை தோராயமாக ரூ. 30 லட்சம் என்று சொல்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் உமேஷ் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா போன்றோரும் லட்சக்கணக்கான விலை கொண்ட கைக்கடிகாரங்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்களாம். ஆனால் இவர்கள் எல்லாம் லட்சக்கணக்கில்தான் வாட்ச் வைத்துள்ளனர்.

சச்சின் கோடீஸ்வர வாட்ச்
ஆனால் சூப்பர் கிரிக்கெட்ரான கடவுள் சச்சின் டெண்டுல்கர்தான் இவர்களுக்கு முன்னோடி. இவரிடம் ரூ. 1 கோடியைத் தாண்டிய விலை கொண்ட மிக காஸ்ட்லியான வாட்ச் உள்ளது. இதை அதிகமாக வெளியில் போட்டுக் கொண்டு வர மாட்டார் சச்சின். மிகமிக முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இதைப் போட்டுக் கொண்டு வருவது வழக்கம். உலக அளவில் காஸ்ட்லியான வாட்ச் பயன்படுத்தும் வெகு சிலரில் சச்சினும் ஒருவர்.
நமக்கெல்லாம் எச்எம்டி வாட்ச்தான்.. அதையும் அப்பப்ப தட்டி தட்டி ஓட வைக்கணும்!


Click it and Unblock the Notifications