பாஸ்.. காதைக் கிட்ட கொண்டு வாங்க.. அனுஷ்காவோட செல்லப் பெயர் என்னன்னு தெரியுமா??
டெல்லி : தீபாவளிக்கான ஜி தொலைக்காட்சியில் அமிர் கானுடன் உரையாடும் ஷோவில் பங்கேற்கும் கோஹ்லி நிகழ்ச்சியின் ப்ரமோவில் அனுஷ்காவின் செல்லப்பெயரைச் சொல்லும் கோஹ்லி வீடியோ வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் காதல் கதை உலகம் அறிந்தது. 2013ம் ஆண்டு முதல் உலா வரும் இந்த காதல் 2015ல் பிரேக் அப் ஆனதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து 2016 முதல் மீண்டும் இவர்களின் ஜோடிப் போட்டோ இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்டவற்றில் தூள் பறக்கத் தொடங்கியது. கோஹ்லியின் கிரக்கெட் சாதனைகளுக்கு இணையாக அனுஷ்காவுடனான அவரின் காதல் கதையும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
இந்நிலையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக ஜீ டிவியில் நடிகர் அமீர்கானுடன், கோஹ்லி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த கலகலப்பான நிகழ்ச்சியில் கோஹ்லி நுஷ்கி மிகவும் நேர்மையானவர், ஆச்சரியமானவர் என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
நுஷ்கி நேர்மையானவர்
அனுஷ்கா ஷர்மாவை 'நுஷ்கி' என்று கோஹ்லி செல்லமாக அழைக்கும் அந்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சமீர் அல்லானா என்ற பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியில், அமீர் கான், கோஹ்லி இடையேயான உரையாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமீர்கானின் அசரடித்த கேள்வி
அனுஷ்கா பற்றி கோஹ்லியிடம் அமீர்கான் கேள்வி கேட்டுள்ளார். அதில் அனுஷ்காவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன வெறுக்கும் விஷயம் என்ன என்று கேட்டுள்ளார்.
கோஹ்லி ஜாலி பதில்
அதற்கு கோஹ்லி, அனுஷ்கா நேர்மையானவர் அன்பாக பார்த்துக் கொண்பவர் என்று கூறியுள்ளார். அவரிடம் வெறுக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் அவர் எப்போதுமே 5 முதல் 7 நிமிடங்கள் தாமதமாக வருவார் என்றும் கூறியுள்ளதாக சமீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications