Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏம்ப்பா உன்னோட வெள்ள முடியையும் கணக்குல எடுத்துக்கனுமா? தோனியை தொடர்ந்து கோலியிடம் வம்பு

லண்டன் : முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியை வம்பிழுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், தற்போது விராட் கோலியையும் வம்புக்கிழுத்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிராக ரன்களை அடிப்பது எளிது என்றும், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தான் விளையாடும்போது, தனக்கு அருகில் நல்ல பீல்டரை போட்டிருக்கலாம் என்றும் முன்னதாக பீட்டர்சன் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அவர்களை வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்நிலையில், தன்னுடைய புதிய ஸ்டைல் தாடி குறித்து கேப்டன் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளதையும் பீட்டர்சன் கேலி பேசியுள்ளார்.

தோனியை வம்பிழுத்த பீட்டர்சன்

தோனியை வம்பிழுத்த பீட்டர்சன்

இந்திய அணியுடன் விளையாடி ரன்களை குவிப்பது மிகவும் எளிது என்றும், கேப்டன் தோனி, தனக்கு அருகில் நல்ல பீல்டரை அமர்த்தியிருக்க வேண்டும் என்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தோனியை வம்பிழுத்திருந்தார். இதையடுத்து கொதித்தெழுந்த ரசிகர்கள், இந்தியாவுடன் விளையாடி 7 முறை டக்-அவுட் ஆனதை மறக்க வேண்டாம் என்று பதிவிட்டிருந்தனர்.

சும்மா இருக்க முடியாத பீட்டர்சன்

சும்மா இருக்க முடியாத பீட்டர்சன்

இதனிடையே, கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கியுள்ள கெவின் பீட்டர்சன், சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தோனியை வம்பிழுத்த கையோடு தற்போது கோலியின் தாடி குறித்த வீடியோவிற்கும் அவரை கலாய்க்கும்வகையில் கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.

விராட் கோலி புதிய லுக்

இதனிடையே, இந்த கொரோனா டைமில் வீட்டிலேயே இருப்பதால், நம்மை புதுப்பொலிவுடன் வைத்துக் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள கேப்டன் விராட் கோலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாடியை தான் வீட்டிலேயே எப்படி டிரிம் செய்தேன் என்பது குறித்த வீடியோவை பதிவிட்டு, தனது ரசிகர்களும் அதேபோல தனது #டிரிம்அட்ஹோம் சேலஞ்சை எடுத்துக் கொண்டு புதிய லுக் வீடியோக்களை பதிவிட கேட்டுக் கொண்டார்.

வம்பிழுத்த பீட்டர்சன்

வம்பிழுத்த பீட்டர்சன்

இதனிடையே கோலியின் இந்த புதிய லுக் மற்றும் அவரது புதிய தாடி ஸ்டைல் குறித்த வீடியோவின் கீழே கமெண்ட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், அவருடைய தாடியில் உள்ள வெள்ளை முடியை வைத்து அவரை வம்புக்கிழுத்தார். அந்த வெள்ளை முடி ரசிகர்களின் புதிய லுக்கிலும் தொடர வேண்டுமா என்ற பொருள்படும்படி அவர் கமெண்ட் செய்திருந்தார்.

Story first published: Sunday, April 19, 2020, 17:37 [IST]
Other articles published on Apr 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+